பேண்டஸி கலந்த காதல் கதை
நாயகன் அஜிதேஜ் சூரியகிரணத்தைப் பார்த்துவிடுகிறார். அதனால் அவருக்கு ஒரு அபூர்வ சக்தி கிடைக்கிறது. அந்த சக்தி என்னவென்றால் அவர் யாருடைய கண்களைப் பார்த்தாலும் அவர்களின் இறப்பு எப்படி இருக்கும் என்பது தெரிந்துவிடும். So அவரின் காதலியான ஸ்ரீ ஸ்வேதாவின் இறப்பும் அவர் கண்களில் தெரிகிறது. காதலியைக் காப்பாற்றினாரா என்பதே மீதிக்கதை
கதையின் நாயகனாக அஜிதேஜ் கூடுமானவரை நல்ல நடிப்பைக் கொடுக்க முயற்சித்துள்ளார். கொடைக்கானல் எபிசோட்களில் நடிப்பில் நல்ல முன்னேற்றம். நாயகி ஸ்ரீ ஸ்வேதா கொடுத்த வேலைக்கு குறை வைக்கவில்லை. நிஜமான அந்த ஏழு நாட்களைக் கொடுத்த கே.பாக்கியராஜ் நடிப்பில் கவனிக்க வைத்துள்ளார். நமோ நாராயணன் ஒகே ரகம்
படத்தின் கதை என்ன பின்னணி இசையை கேட்கிறதோ..அதை வழங்கியுள்ளார் இசையமைப்பாளர் சச்சின் சுந்தர்.
கோபிநாத் துரை தன்னால் முடிந்தளவு நல்ல ஒளிப்பதிவைக் கொடுத்துள்ளார். படத்திற்கு தேவையான பட்ஜெட்-ஐ கொடுத்து புரொடக்ஷனை நேர்த்தியாக செய்துள்ளார்கள் தயாரிப்பாளர்கள் முரளி, கபிர்தாஸ்
கதையை பேண்டஸி கலந்து கொடுத்துள்ள இயக்குநர் எம்.சுந்தர் திரைக்கதையில் டீடைலாக வொர்க் செய்திருக்கலாம். சின்னச் சின்ன காட்சிகளை இன்னும் நேர்த்தியாக உருவாக்கியிருந்தால் அந்த ஏழு நாட்களை எல்லா ஆட்களும் விரும்பியிருப்பார்கள்
பேண்டஸி விரும்பிகள் ஒருமுறை பார்க்கலாம்
2.75/5
-வெண்பா தமிழ்

