ஆஸ்கருக்கு அபிஷியல் என்ட்ரியாகியுள்ள இந்திய சினிமா!
மாராத்தி படம்..தமிழில் டப் ஆகி வெளி வந்துள்ளது. ஒவ்வொரு தனிமனிதனின் தேவைக்காக, அவரவர்கள் செய்யும் சல்லித்தனத்தை தரமாக எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் சந்தோஷ் தவாகர்.
“ஆடு உனக்கு வேண்டுமானால் அதை கட்டி வை” என்றொரு வாசகம் உண்டு. ! பெண்கள் விசயத்தில் அதை அப்ளை செய்யவேண்டும் என்ற கருத்தை படம் மையமாகச் சுட்டுகிறது. தமிழ்நாட்டில் இந்தப்படம் பெண்ணுரிமைக்கு எதிரானது என்றே கருதக்கூடும்! படத்தில் அதை போர்ஸ் செய்யாமல் மிகச்சிறப்பாக திரைக்கதையை கையாண்டுள்ளார் இயக்குநர்.
லைவ் லைட்-ஐ கண்முன் நிறுத்தி அசத்தியுள்ளது சினிமாட்டோகிராபி. இளையராஜாவின் இசை படம் முடிந்து வெளியில் வரும்போதும் நமக்குள் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
படத்தில் நடித்துள்ள அனைவரும் சத்தியமாக நடிக்கவில்லை. அப்படியே வாழ்ந்துள்ளனர். நாயகன் நாயகி வில்லன்கள் உள்ளிட்ட எல்லா மெயின் கேரக்டர்களும் பட்டையக்கிளப்பியுள்ளனர்
சர்வ நிச்சயமாக தரமான தமிழ் டப்பிங் எனலாம். கதை 80 காலகட்டத்தில் ஒரு கிராமத்தில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளதால் நெல்லை தூத்துக்குடி தென்காசி ஆகிய மாவட்டங்களின் ஸ்லாங்கை வைத்துள்ளார்கள். மராட்டி நடிகர்கள் எல்லாம் திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி பாஷை பேசியிருப்பது ஹேப்பியாகத் தான் இருக்கிறது
வர்க்கம், சாதி, பெண்ணியம், வன்மம், பழிவாங்கல் உள்ளிட்ட நிறைய விசயங்களை ஒரு இரவுக்குள்ளே ஒரு கூத்துக்கலை துணையோடு சொல்லியுள்ளார் இயக்குநர். ஆஸ்கருக்குச் செல்ல தகுதியான படம். ரசிகர்கள் பார்க்கவும் தான்
3.75/5
-வெண்பா தமிழ்

