நகை சம்பந்தப்பட்ட படம் என்றால் வெற்றிக்கு ஒரு கனெக்சன் உண்டு! இந்தப்படம் நமக்கு கனெக்ட் ஆகியுள்ளதா?
ஒரு எளிய குடும்பத்தின் பிள்ளை ஹீரோ வெற்றி! அம்மா அப்பா தங்கை என உறவுகள் கொண்ட வெற்றிக்கு ஒரு காதலியும் உண்டு. அப்பா லிவிங்ஸ்டன் ஏ.வெங்கடேஷின் கம்பெனிக்கு டிரைவர். ஏ. வெங்கடேஷ் செய்யும் ஒரு தொழிலில் பெரும் போட்டி நிலவுகிறது. ஒரு முக்கியமான சரக்கு டெலிவரிக்கு ஏ.வெங்கடேஷ் லிவிங்ஸ்டனை அனுப்புகிறார். லிவிங்ஸ்டனுக்கு அங்கு ஓர் ஆபத்து நேர்கிறது. அதற்கு காரணமானவர்களை ஹீரோ கண்டுபிடித்து களையெடுப்பது தான் படத்தின் கதை
ஹீரோவாக வெற்றி வழக்கம் போல தன் மீட்டருக்குள் நடித்துள்ளார். இன்னும் அடுத்தகட்டம் அவர் செல்லவேண்டுமானால் நிச்சயமாக நடிப்பில் சில மாற்றங்களை அவர் செய்தாக வேண்டும். நாயகி பிரியாலயா அழகாக இருக்கிறார். குட்டி வேடமென்றாலும் அதைக்கச்சிதமாகச் செய்துள்ளார். லிவிங்ஸ்டன், அபிராமி வெங்கடாச்சலம், ஏ.வெங்கடேஷ், ராமர், அரோல் டி சங்கர், சபிதா ராய் உள்ளிட்ட இன்னும் சின்னச் சின்ன கேரக்டர்களில் வரும் நடிகர்களும் ஓரளவு ஸ்கோர் செய்துள்ளனர்
கவாஸ்கர் அவினாஷ் காட்சிகளில் இல்லாத வீரியத்தை தன் இசையில் கொண்டுவந்துள்ளார். பாடல்கள் மனதில் ஒட்டவில்லை. ஒளிப்பதிவாளர் சில இடங்களில் தரமான பிரேமிங் வைத்துள்ளார். எடிட்டர் நிறைய இடங்களில் இன்னும் கவனத்துடன் இருந்திருக்கலாம்
இயக்குநர் தீரன் அருண்குமார் கதைக்களத்தை புதுமையான ஒன்றாக அமைத்துள்ளார். முடி பிஸ்னெஸுக்குள் இருக்கும் போட்டியை அழகாக கன்வே செய்துள்ளார். ஆனால் கதையை திரைக்கதையாக மாற்றும் ரசவாதம் தான் அவருக்குப் போதிய அளவிற்கு கை கொடுக்கவில்லை. இருந்தாலும் ஒரு டீசன்ட் வாட்ச் கேட்டகிரியில் படம் இருப்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்
2.75/5
-வெண்பா தமிழ்

