மலையாள ஸ்டைலில் ஒருதமிழ் சினிமா!
கிரைம் பிரான்ச்-ல் மிகமிக பிரில்லியண்ட் அதிகாரியாக இருக்கும் அடாவடி சூர்யா தன் வேலையை ரிசைன் செய்கிறார். உயர் அதிகாரியான லால், “இன்னும் ஒரு கேசை முடிச்சிட்டுப் போப்பா” என கெஞ்சுகிறார். அந்தக் கேஸுக்குப் பின்னால் ஒரு ஆபத்து இருக்கிறது..அந்த ஆபத்து சூர்யாவால் சூர்யாவிற்கே இருக்கிறது என்பது தான் ட்விஸ்ட்! மேலும் கொலை செய்வதை கலை சேவை போல் செய்துவரும் நஸ்லீன் ஆட்டம் ஒருபக்கம் பதபதைக்க வைக்கிறது. இப்படியான சூழலில் சீனின் என்ட் என்ன என்பதை நோக்கி விறுவிறுப்பாக பாய்கிறது ஜீத்துஜோசப்பின் திரைக்கதை
சூர்யா தன் நேர்கொண்ட பார்வையை சற்று மாற்றி ராஜபார்வையோடு வலம் வருகிறார். ஆரம்பத்தில் அவர் காட்டும் அடாவடி அராத்துகள் அடிப்பொலி ரகம். பின்பாதியில் அதற்கான ரீசனை சூர்யாவே சொல்வது வாவ் மொமெண்ட்! ஒரு நடிகைக்கு கம்பேக் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லுமளவு நஸ்ரியா பின்னியுள்ளார். நஸ்லீன் அட்டகாசமான நடிப்பைத் தந்துள்ளார். ஆச்சர்யப்படுத்துகிறது அவரது உடல்மொழியும் குரல்மொழியும். ஆனந்த் ராஜ் உள்ளிட்ட இன்னபிற கேரக்டர்கள் அனைவரும் ஒகே. டொவினோ தாமஸ் என்ட்ரி பக்கா! லால் இந்தப்படத்தில் சீரியஸாக நடித்து நம்மை சிரிக்க வைத்துள்ளார்
ஒளிப்பதிவாளர் படத்தின் மிக முக்கியமான தூண். வீட்டிற்குள்ளே நடக்கும் ஒரு சண்டைக்காட்சியை சவாலோடு படம் பிடித்துள்ளார். இசைஞர் அற்புதமான இசையைத் தந்துள்ளார். பாடல்களும் சிறப்புத் தான்
இந்தப்படத்தின் கதைக்குள் இருக்கும் ஆச்சர்யங்களை எழுதிய ஜீத்து ஜோசப்பிற்கு முதலில் வாழ்த்துகள். தமிழ் ரசிகர்களின் பல்ஸ் அறிந்து பல சுவாரஸ்யங்களை திரைக்கதையில் வைத்துள்ளார். மனித உறுப்புகளிலுள்ள குறைகளை வைத்து செய்துள்ள காமெடிகளை மட்டும் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். மலையாள ரசிகர்களுக்கு இது வழக்கமான படமாகத் தான் தெரியும். தமிழ் ரசிகர்களுக்கு இது புது அனுபவமாக இருக்கும். நிச்சயமாக படம் என்கேஜிங் & இன்டெர்ஸ்டிங்காக இருக்கிறது! So Go to theatre guys! This is scene diwali
3.75/5
-வெண்பா தமிழ்

