எமோஷ்னலை வன்முறையால் கையாளும் டாக்ஸிக் ஒருவனின் கதை
அக்கா நயன்தாரா தம்பி யாஷ் இருவரும் சிறுவயதிலே பெற்றோரின் மரணத்தை கண்ணதெரிலே கண்டவர்கள். அந்தப் பாதிப்பிலே வளரும் அவர்கள் கோவாவில் ஒரு டானிடம் வேலை செய்கிறார்கள். அந்த டானின் மகளை யாஷ் திருமணம் செய்யவிருக்கும் நிலையில் அவருக்கு கியாரா அத்வானி மீது காதல் வருகிறது. அதனால் டான் குடும்பத்திற்கும் யாஷ் மற்றும் நயனுக்கு பல சிக்கல்கள் வருகிறது. 1947-ல் நடக்கும் இந்தச் சம்பவம் 1967 வரைக்கும் கதையை இழுக்கிறது.
கதாநாயகன் யாஷ் ஊனை உருக்கி, உயிரைத் திருக்கி உழைத்துள்ளார். இந்தப் படத்திற்காக அவர் காட்டியிருக்கும் அர்ப்பணிப்பு பிரமிக்க வைக்கிறது. அக்காவாக வரும் நயன்தாரா சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். தம்பிக்காக அவர் செய்யும் தியாகங்கள் ஓரளவு மனதில் நிற்கிறது. கியாரா அத்வானி நடிப்பிலும் கிளாமரிலும் கிறங்கடித்துள்ளார். ருக்மணி வசந்த் ஓரளவே கவனம் ஈர்க்கிறார். தாரா சுதாரியா, ஹுமா குரேஷி உள்ளிட்ட இன்ன பிற நடிகர்கள் எல்லாம் ஒகே. ரைட்டிங்கில் எந்தக் கேரக்டருக்கும் பெரிய இம்பேக்ட் இல்லை என்பதால் அவர்களை ஸ்கிரீனில் பெரிதாக ரசிக்க முடியவில்லை
ராஜீவ் ரவியின் ஒளிப்பதிவு மிரட்டுகிறது. விஷுவலில் படம் புதிய பாய்ச்சலை எட்டியுள்ளது. ரவி பஸ்ரூர், விஷால் மிஸ்ரா, தனிஷ்க் பாக்சி மூன்று இசையமைப்பாளர்கள் படத்தில். சில இடங்களில் சத்தம் அதிகமாக இருக்கிறது. பாடல்கள் ஒகே ரகம்
இயக்குநர் கீதாமோகன் தாஸோடு நடிகர் யாஷும் ரைட்டிங் பணியைச் செய்துள்ளார். ரைட்டிங்கில் இன்னும் டெப்-த்தை கொண்டுவந்திருக்கலாம். மேக்கிங் மட்டும் அசத்தல். இந்தப்படம் மூலமாக வன்முறையைத் தவிர வேறு எதையும் எடுத்துச் செல்ல முடியவில்லை. அட்லீஸ்ட் பின்பாதி படத்திலாவது ஹீரோ மீது நமக்கு எமோஷ்னல் பாண்டிங்-ஐ கொண்டு வந்திருக்கலாம். ப்யூரான உழைப்பு, poor-ஆன ரைட்டிங்கால் வீணாகிவிட்டது
தொழில்நுட்ப வித்தைகளை ரசிப்பவர்களுக்கு வேண்டுமானால் டாக்ஸிக் பிடிக்கும். அந்த ஒரு அம்சம் மட்டும் ஈர்க்கிறது
2.75/5
-வெண்பா தமிழ்

