இன்சிடியஸ் தொடர் சினிமாக்களில் மற்றொரு மாஸ் பீஸ் படமாக வெளியாகவுள்ளது இன்சிடியஸ்: அவுட் ஆஃப் த ஃபர்தர்
நாம வாழுற உலகத்திலிருந்து கொண்டே தனியாக இயங்கும் ஆவி உலகிற்கு சென்று திரும்பும் வல்லமை ஒரு பெண்ணிற்கு இருக்கிறது. அந்தப் பெண் தான் நாயகி அமீலியா ஈவ். அவரின் இந்தப்பவரை பயன்படுத்தி ஆவி உலக ஆட்களை இங்குள்ள நார்மல் உலகிற்கு கொண்டுவர மாஸ்டர் ப்ளான் போடுகிறான் வில்லன். அதற்காக அமீலியா ஈவ்-ன் குழந்தையை வைத்து ப்ளாக்மெயில் செய்கிறான். மேலும் அமீலியா ஈவ்-க்கும் நிறைய குடைச்சலைக் கொடுக்கிறான். அவற்றிலிருந்து அவர் எப்படி தப்பித்து, ஆவி உலக பேய்களை நம் உலகிற்குள் வர விடாமல் செய்தார் என்பதே படத்தின் விறுவிறு திரைக்கதை
கதையின் நாயகி அமீலியா ஈவ் மிரட்டலான நடிப்பை வழங்கியுள்ளார். அவரின் மிரட்சியான ரியாக்சன்ஸ் அட்டகாசம். மேலும் பிராண்டன் பெரியா, மேசி ரிச்சர்ட்சன்-செல்லர்ஸ், லின் ஷே, லாரா கார்டன் உள்பட படத்தில் வரும் எல்லாருமே தரமாக நடித்துள்ளனர்
ஹாரர் படங்களின் ஆன்மா ஒளிப்பதிவும் இசையும் தான். அதை உணர்ந்து இசைஞர் ஜோசப் பிஷாராவும், ஒளிப்பதிவாளர் டேவ் கார்பெட்டும் உழைத்துள்ளார்கள். அவர்களின் உழைப்பு திரையில் தெரிகிறது
முதல் காட்சியிலே படம் பார்க்கும் நம்மை ஹாரர் மூட்க்குள் கொண்டு வந்துவிடுகிறார் இயக்குநர் ஜேக்கப் சேஸ். ஒரு நிமிடம் கூட நம் கவனத்தை திசை திருப்பாத திரைக்கதையும் காட்சியமைப்புகளும் அசத்தல். நல்ல தியேட்டரில் சென்று பார்க்க வேண்டிய படம்
3.5/5
-வெண்பா தமிழ்

