நீண்ட நாட்களுக்குப் பின் பாக்கியராஜ் ஸ்டைலில் ஒருபடம். விரசமில்ல..ஆனா விசயமிருக்கு
ஹீரோ ரிஷிகாந்த் துபாயிலிருந்து வருகிறார். வந்தவரிடம் ஒரு பெண்ணைக்காட்டி கல்யாணம் பண்ணச் சொல்கிறது குடும்பம். அவருக்கு கல்யாணத்தில் இஷ்டமில்லை. அதேபோல் மணப்பெண்ணான அனிஷ்மா அனில்குமாருக்கும் கல்யாணத்தில் இஷ்டமில்லை. மேலும் மொத ராத்திரிக்கு முன்பாக தன் காதலனோடு ஓடிப்போகவும் திட்டம் போடுகிறார். அனிஷ்மாவின் காதலன் ஒரு மங்குனி இளைஞனாக இருக்கிறார் என்பது வேறலெவல் ட்விஸ்ட்! இந்தக் களேபரத்தில் மொத ராத்திரி என்னானது? என்பதே படத்தின் கதை
ரிஷிகாந்த் கதைக்குள் தன்னை முழுமையாக பொருத்திக்கொண்டு சிறப்பாக நடித்துள்ளார். ஒன் வுமன் ஆர்மியாக படத்தில் மாஸ் காட்டியுள்ளார் நாயகி அனிஷ்மா! ஒவ்வொரு சீனிலும் அவரது பெர்பாமன்ஸ் பெரும் பிளஸ். அப்துல் லீ, வெங்கடேஷ், பக்ஸ், சேத்தன் உள்ளிட்ட எல்லாக் கேரக்டர்களும் தரமாக நடித்துள்ளனர். படத்தின் இயக்குநர் ராஜா கருப்பசாமியின் கேரக்டரும் நடிப்பும் செம்ம!
படத்தின் இசையமைப்பாளர் பரத் சங்கர் கதையின் போக்கை உணர்ந்து இசைத்துள்ளார். பாடல்களும் ஒகே ரகம். ஒளிப்பதிவாளர் சுரேந்திரன் பரஞ்ஜோதி நேர்த்தியான ப்ரேமிங்-ஐ வைத்து அசத்தியுள்ளார்
தென்மாவட்டத்தை கதைக்களமாக கொண்டுள்ளதால் சில விசயங்களை நம்ப வைத்து சாதித்துள்ளார் இயக்குநர். மொத ராத்திரி என்ற டைட்டிலை வைத்தும் விரசமில்லாமல் படத்தை நகர்த்தியுள்ளார். கிராமங்களில் இன்றும் நங்கூரமாக நிற்கும் சாதிவெறி, வர்க்கப் பாகுபாடு ஆகியவற்றையும் திணிப்பாக இல்லாமல் சரியாக பேசியுள்ளார் இயக்குநர் ராஜா கருப்பசாமி. கரெக்டான எமோஷ்னல், கலவையான காமெடி என ஒரு பக்கா பேமிலி எண்டர்டெய்ன்மெண்ட் இது. நம்பிச் செல்லலாம்
3.25/5
-வெண்பா தமிழ்

