‘எது செய்தாலும் அதில் தனித்துவம் இருக்கணும்’ என நினைக்கும் படைப்பாளி சங்ககிரி ராஜ்குமார். அவரது மிகப்பெரிய முயற்சி. இந்த ஒன் படம். படத்தில் கேமராவிற்கு முன்வரும் ஆட்கள் எல்லோரும் அவர் ஒருவரே.. படத்தில் கேமராவிற்கு பின்னால் இருக்கும் அனைத்து டெக்னிஷியன்ஸும் அவர் ஒருவரே! இப்படியான அட்டகாசமான முயற்சிக்காகவே முதலில் வாழ்த்துகள்
கதை?
மல்டி டேலண்ட் உள்ள நான்கு இளைஞர்கள் தங்களுக்கு வழங்கவுள்ள விருதுகளை வாங்கச்செல்கிறார்கள். அது லாக்டவுன் அறிவிக்கவுள்ள நேரம். அவர்கள் செல்லும் பாதையில் சில பல தடைகள் ஏற்பட்டு ஒரு முக்கியமான லேபிற்கு சென்று விடுகிறார்கள். அங்கு அவர்கள் செய்யும் ஒரு காரியத்தால், உலகில் அனைவரும் மறைந்து விடுகிறார்கள். இதன் தீர்வு என்ன? என்பதே படத்தின் கதை! (ஆக்ஷுவலா இது ஹாலிவுட்ல வேறலெவல்ல வொர்க் ஆகிற கன்டென்ட்)
நடிகராக எல்லாக் கேரக்டராகவும் வரும் சங்கரகிரி ராஜ்குமார் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார். ஒவ்வொரு கேரக்டருக்குமான வித்தியாசத்தை கெட்டப்பில் மட்டுமில்லாது பாடிலாங்வேஜுலும் காட்டியது சூப்பர்.
படத்திற்கு தேவையான கேமரா சவுண்ட் எபெக்ட், உள்ளிட்ட டெக்னிக்கல் வேலைகளையும் திறம்பட செய்துள்ளார். கிராபிக்ஸும் அவரே செய்திருப்பது இந்தப்படைப்பின் மீதான அவரது பெருங்காதலை உணர்த்துகிறது
கதையில் நல்ல பேண்டஸி தன்மை இருப்பினும், திரைக்கதை இன்னும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கலாம். இருந்தாலும் இப்படி ஒரேயொருவர் எல்லாவற்றையும் செய்ய முடியுமா? என்ற வியப்பு படம் முடியும் வரை நமக்குள் எழுந்துகொண்டே இருக்கிறது அந்த வியப்புக்காக மட்டுமே லைக்ஸ் போடலாம்/ வரவேற்கலாம்! மேலும் படம் முன் நிறுத்தும் பொதுமை நிறைந்த கருத்துக்கும் கூடுதல் லைக்ஸ் போடலாம்!
கடைசி 5 நிமிடம் இந்தப்படத்தை அவர் தனியாளாக எடுத்து நடித்ததை வீடியோவாக காட்டுகிறார். அந்த வீடியோவைப் பார்க்கும் போது கண்கள் கலங்குகின்றன. சினிமாவை உயிராக நேசித்துள்ள இந்த மகத்தான கலைஞன் மாபெரும் வெற்றியடைய வேண்டும்!
4/5
-வெண்பா தமிழ்

