நடிகர் கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் புதிய படம்!

தனித்துவமான, உள்ளடக்கம் சார்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து, பல அடுக்குகளுடன் கூடிய கதாநாயகன் கதாபாத்திரங்களில் திறமையை வெளிக்கொணர்ந்து வருகிற நடிகர் கவுதம் ராம் கார்த்திக், தற்போது வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

தனிஷ்தன் பெர்னாண்டோ, ராஜராஜன் கணநாசம்பந்தம், சஞ்சய் சங்கர் மற்றும் ஷைக் முஜீப் ஆகியோரால் தயாரிக்கப்படும் இந்த திரைப்படம், “நாளைய இயக்குநர் சீசன் 1” மூலம் அறிமுகமான இயக்குநர் சூரியபிரதாப் எஸ் இயக்கத்தில் உருவாகவிருக்கிறது. இவர், சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘கோச்சடையான்’ படத்தில் அசோசியேட் டைரக்டர் ஆக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பெயரிடப்படாத திரைப்படம் ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் கிரைம் த்ரில்லர் ஆக உருவாகவிருக்கிறது. இதில் கவுதம் ராம் கார்த்திக், ஒரு போலீஸ் அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது, மேலும் படத்தின் பெரும்பாலான பகுதி சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நடைபெறும். இதில் பலர் அறிந்த முகங்கள் நடிக்கவிருக்க, முழுமையான நடிப்பு பட்டியலை அடுத்த கட்ட அறிவிப்புகளில் வெளியிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

படத்தின் வில்லன் கதாபாத்திரம் மிகவும் சக்திவாய்ந்தது, அதனை சிறப்பாகச் செய்வதற்காக பான் இந்தியா புகழ்பெற்ற பல பிரபல கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *