முதல் பாகத்துல ‘Male சாவனிஸ்டா’ இருந்த விஷ்ணு விஷால் இந்த இரண்டாம் பாகத்துல ஹவுஸ் அஸ்பெண்டா இருந்து அசத்திருக்காப்டி.
கதையை லைட்டா பார்த்திடலாம்
அன்பான குடும்பம் என்பதற்கு அடையாளமாக இருக்கிறார்கள் விஷ்ணு விஷால், ஐஸ்வரியா லெட்சுமி தம்பதியினர். அவர்களுக்கு 6 வயதில் ஒரு அழகான பெண் குழந்தை. வேலைக்குச் சென்றபடியே மல்யுத்தத்தில் அடுத்த லெவலுக்கு போக முயற்சிக்கிறார் ஐஸ்வர்யா லெட்சுமி. அவருக்காக வீட்டில் எல்லா வேலைகளையும் செய்து ஹவுஸ் அஸ்பெண்டாக உதவுகிறார் விஷ்ணு விஷால். ஐஸ்வர்யா லெட்சுமியின் வளர்ச்சியைக் கண்டும், திறமையைக் கண்டும் பொறாமை அடையும் கோச் ஒருவர் அவருக்கு எதிராக சில சதிகளைச் செய்கிறார். அந்தச் சதிகளுக்கு விஷ்ணு விஷாலும் தெரியாத்தனமாக துணை போய்விடுகிறார். அதனால் குடும்பம் உடைகிறது. அப்படியே ஐஸ்வர்யா லெட்சுமி கனவும் உடைகிறது. உடைந்த குடும்பமும் கனவும் சரியானதா என்பது படத்தின் மீதிக்கதை
ஆகிருதி, அசால்டு என எல்லா லெவலிலும் இறங்கி அடித்துள்ளார் விஷ்ணு விஷால். குறிப்பாக மீனு மிஸ்ஸிடம் அவர் உருகி வழியும் காட்சிகள் அல்டிமேட் ரகம். ஐஸ்வர்யா லெட்சுமி எமோஷ்னல், சண்டைக்காட்சிகள் என அனைத்திலும் டாப் டக்கரு. மகளை அடித்துவிட்டு அதன்பின் வருந்தும் காட்சிகளில் உருக வைத்துவிடுகிறார். முனிஷ்காந்த், காளிவெங்கட், கருணாஸ் மூவரும் காமெடியை பங்கு போட்டுக்கொள்கின்றனர். மீனு மிஸ், கருணாகரன் என்ற எக்ஸ்ட்ரா லக்கேஜ் கூட இந்தக்கதைக்கு மைலேஜ் சேர்த்திருக்கிறது. கெஸ்ட் ரோலில் வரும் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு இருவரும் கடைசிநேர காமெடிக்கு கியாரண்டி தந்துள்ளனர். ஒகே இனிதான் முக்கியமான ஒரு நடிகையைச் சொல்லவேண்டும். யெஸ்! மகளாக நடித்துள்ள அந்தக்குட்டிப் பெண் அசத்தியுள்ளாள். குறிப்பாக எமோஷ்னல் காட்சிகளை மெச்சூட் ஆக கேண்டில் செய்துள்ளார்.
MK.பாஸ்கரனின் ஒளிப்பதிவில் எதார்த்த அழகியல் கொட்டிக்கிடக்கிறது. விஷுவலாக படம் தரமோ தரம். ஷான்ரோல்டன் இசையில் பாடல்கள் நல்ல சைட் கிக்கராக வொர்க் ஆகியுள்ளது. குறிப்பாக மகராசி பாடல் சூப்பர். பின்னணி இசையிலும் வழக்கம் போல் அசத்தியுள்ளார்
செல்ல அய்யாவு ஸ்கிரீன் ரைட்டிங்கில் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். விண்டேஜ் பாக்யராஜ் ஸ்டைலில் நிறைய காட்சிகள் மனதுக்கு நிறைவளித்தன. குட்டி குட்டி வசனங்களை வைத்தே பின்பாதியில் லீட் கொடுத்த விதம் அசத்தல். பெண்கள் வீர விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்ற மெசேஜும், ஆண்கள் வீட்டு வேலை செய்வது அவசியம் என்றும் போகிற போக்கில் உணர்த்தியது நல்ல அம்சம்..நிச்சயமாக நம்பி தியேட்டருக்குச் செல்லலாம்
கட்டா குஸ்தி2- கல்லா கட்டும்
3.5/5
-வெண்பா தமிழ்

