இரட்டையர்- விமர்சனம்

சிறிய பட்ஜெட்டில் ஒரு சிறந்த திரைக்கதையைச் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ஜெக்தீஷ்

நாயகி அபிநயா தன் கணவர் மற்றும் இரு குழந்தைகளோடு ஒரு மலைப்பகுதியில் காரில் செல்கிறார். சுப்பிரமணியசிவா ஒரு அறையில் இருந்துகொண்டு அபிநயா கணவரிடம் ஒரு வீட்டு விற்பனை சம்பந்தமாக போனில் பேசுகிறார். இருவருக்கும் மாறுபட்ட கருத்தொற்றிய பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது கார் கன்ட்ரோல் இழந்து பெரும் விபத்து நேர்ந்துவிடுகிறது. பலத்த காயத்தோடு அபிநயா தப்பித்துவிடுகிறார். அவரின் கணவர் இறந்து விடுகிறார். அதன்பின் இரு குழந்தைகள் மீதும் அபிநயா வெறுப்பை காட்டுகிறார். இதனால் இந்தக் குழந்தைகளுக்கு அபிநயா தன் அம்மாவே இல்லையோ என சந்தேகம் ஏற்படுகிறது. அதற்கான லாஜிக்கும் கதையில் இருக்கிறது. அதன்பின் நடக்கும் அதிரிபுதிரி திருப்பங்கள் தான் படத்தின் கதை

கதையின் நாயகி அபிநயா என்பதா.. இல்லை Child நாயகிகள் அனுமிதா, அனுஷிதா என்பதா என யோசிக்கும் அளவில் இரு குழந்தைகளாக நடித்துள்ள அனுமிதா, அனுஷிதா அசத்தியுள்ளனர். குறிப்பாக அபிநயாவை டார்ச்சர் செய்யும் காட்சி ஒன்றில் பின்னியெடுத்துள்ளனர் இந்த ஸ்வீட் ட்வின்ஸ்! அபிநயா எமோஷ்னல் காட்சி ஒன்றில் பிரமாதமாக ஸ்கோர் செய்துள்ளார். சுப்பிரமணியசிவா கொடுக்கப்பட்ட கேரக்டரை கச்சிதமாக உள்வாங்கி நடித்துள்ளார்.

KRV இசையில் நல்ல மைலேஜ் கிடைத்துள்ளது. ஒரு சைக்காலஜிக்கல் திரில்லர் திரைக்கதைக்குத் தேவையான எல்லா நுண் இசை வடிபத்தையும் முயற்சித்துள்ளார் இசைஞர். ஒளிப்பதிவாளர் முஹம்மது அமீன் தனக்கு கொடுக்கப்பட்ட பட்ஜெட்டில் கிடைத்த எக்யூப்மெண்ட்ஸ்-ஐ வைத்து சிறப்பாக பணியாற்றியுள்ளார்.

இயக்குநர் ஜெக்தீஷ் சிம்பிளாக ஒரு லைனை வைத்து சிறப்பாக திரைக்கதை அமைத்துள்ளார். அவரின் பிரில்லியண்ட் படத்தின் நீளத்தை தீர்மானித்ததில் தெரிந்தது. படத்தின் கடைசியில் யாரும் எதிர்பார்த்திராத ட்விஸ்ட் வைத்து அசத்தியுள்ளார். சிறிய பட்ஜெட் படத்திற்குள் ஒரு மெச்சூட்-ஆன மேக்கிங்-ஐ கொடுத்துள்ளார் ஜெக்தீஷ்

இரட்டையர்- நல்ல சம்பவம்
3.25/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *