ஆன்மிகம், அமானுஷ்யம் கலந்த ஒரு கமர்சியல் சினிமா இந்த மரகதமலை
பெரும் நகைகளை தன் சமாஸ்தானத்தில் வைத்து வாழ்ந்து வருகிறார் அரசனான ச்ந்தோஷ்பிரதாப். மனைவி மற்றும் மகனோடு மகிழ்வாக செல்கிறது அவரது வாழ்க்கை. ஒருநாள் அவரது குலதெய்வ பூஜைக்கு அவரது நண்பர் அழைக்கிறார். சந்தோஷ் பிரதாப் வரவில்லை என்கிறார். அந்தப்பூஜைக்கு செல்லாததால் அவருக்கு தெய்வசாபம் ஏற்படுகிறது. அதன்பின் அவர் வாழ்வில் பெரும் சிக்கல்கள் நேர்கிறது. அவர் வசமுள்ள நகைகளை கொள்ளையடிக்க ஒரு கும்பல் வருகிறது. மனைவி ஒரு முனிவரின் சாபத்தால் கல்லாகிவிடுகிறார். மகன் காணாமல் போய் விடுகிறான். இப்படியான துயரங்கள் அவரைச் சூழ்ந்துகொள்ள அதன்பின் இவற்றையெல்லாம் சரிசெய்து, எப்படி மீண்டு மீண்டும் இயல்பு வாழ்வை பிடிக்கிறார் என்பதே படத்தின் மீதி திரைக்கதை
அரசன் தோற்றத்திற்கு கம்பீரமாக இருக்கிறார் சந்தோஷ் பிரதாப். மகன் மீது காட்டும் அன்பு, மனைவி மீது கொண்ட காதல் என எல்லா உணர்வுகளையும் கச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளார். தீப்ஷிகா இருவேறு பரிணாமம் காட்டியுள்ளார். க்ளைமாக்ஸில் அபாரமாக நடித்துள்ளார். தம்பி ராமையா நண்டு ஜெகன் கூட்டணி படத்தை கலகலப்பாக நகர்த்தியிருக்கிறது. மாஸ்டர் சஷானந், அரிமாவர்மன், கலைக்கோவர்மன், மகித்ரா, சம்பத் ராம் உள்ளிட்ட அனைவரும் நன்றாக நடித்துள்ளனர்
PG முத்தையாவின் ஒளிப்பதிவு மரகதமலையின் அழகை நம் கண்களுக்கு விருந்தாக்கியுள்ளது. நிறைய காடுகளுக்கு லைவாக சென்று பட்ம்பிடித்துள்ளனர். இசையமைப்பாளர் எல்.வி முத்துகணேஷ் மிகவும் தரமான இசையை வழங்கியுள்ளார். பா.விஜய்,, கே.டி சேஷா இருவரும் பாடல்களை எழுதியுள்ளனர். க்ளைமாக்ஸ் பாடலை தன் ஆழமான வரிகளால் சேஷா சிறப்பாக்கியுள்ளார். நடனம் அமைத்த சந்தோஷ், கலை இயக்குநர் பி சண்முகம், சண்டைக்காட்சி இயக்குநர் டேஞ்சர் மணி, எடிட்டர் பைஜு டான் பாஸ்கோ என எல்லா டெக்னிஷியன்ஸும் தங்களது உழைப்பை ஆத்மார்த்தமாக செய்துள்ளனர்.
LG மூவிஸ் சார்பாக படத்தை தயாரித்துள்ள எஸ்.லதா இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். மிக நார்மலாக துவங்கும் கதை சின்னதாக ஆன்மிக சாயல்கொண்டு பயணிக்கிறது. அரை மணிநேரத்திற்குப்பின் அமானுஷ்யமும் சேர்ந்து கொள்கிறது. தாய் தந்தையை தேடி சிறுவன் சஷானந் பயணிக்கும் காட்சிகள் உருக்கமானவை. மெயின் கதையாக ஒன்றை வைத்து, குட்டிக்குட்டி கிளைக்கதைகளையும் மெயின் கதையோடு இணைத்திருப்பது நல்ல ஐடியா.
நிச்சயமாக படத்தை சிறுவர்கள் என்சாய் செய்வார்கள். நம்பி தியேட்டருக்குச் செல்லலாம்
3.25/5
-வெண்பா தமிழ்

