அனந்தா- விமர்சனம்

புட்டர் பத்தி ஸ்ரீசத்ய சாய்பாபாவின் பேரருளைச் சொல்லும் பெருங்காவியம் இந்த அனந்தா

கதையின் முதன்மை நாயகனான ஜெகபதி பாபு பணம் உழைப்பு என திரிந்துகொண்டிருப்பவர். “பொன்கோடிச் சேர்த்தாலும், முடிவில் மண்மூடிபோகும் வாழ்வு தானே இது” என அவர் உணர்ந்து ஆன்மிகம் பக்கம் சாய்கிறார். ஒரு கட்டத்தில் கொள்ளைச் செயலில் ஈடுபடும் நபர்களை அவர் ஆன்மிகம் பக்கம் கொண்டு வர முயற்சிக்கிறார். அவரின் ஆன்மிக முயற்சி கை கூடியதா என்பது கதை. இதைப் போலவே மனைவியை இழந்த ஒய்.ஜி மகேந்திரனுக்கு, மகன் மரணப்படுக்கையில் இருக்க கடவுளிடம் மன்றாடும் சுகாசினிக்கு ஆகியோருக்கும் கதைகள் உள்ளது. இதுபோக இன்னும் இருகதைகளும் படத்திலுண்டு

படத்தில் ஜெகபதி பாபு ஆன்மிக விரும்பியாக முதிர்ச்சி நிரம்பிய நடிப்பைக் கொடுத்துள்ளார். போலவே சுகாசினியும் அற்புதமான நடிப்பைக் கொடுத்துள்ளார். அவர் பேசும் வசனங்கள் படத்திற்கு பெரும்பலம். ஒய்.ஜி மகேந்திரன் நல்ல கனமான நடிப்பை வழங்கியுள்ளார். தலைவாசல் விஜய், நிழல்கள் ரவி, அபிராமி உள்ளிட்ட் எல்லா நடிகர்களும் தங்களது நல்ல நடிப்பால் அனந்தாவிற்கு பெரும் உந்துதலைத் தந்துள்ளனர்.

தேவாவின் பின்னணி இசையில் பேரதற்புதம் நிகழ்ந்துள்ளது. பாடல்களில் பாபாவின் அருள்பிரவாகம் பொங்கியுள்ளது. சஞ்சய் மிகவும் சிறப்பான ஒளிப்பதிவைச் செய்துள்ளார்.

பாட்ஷா படத்தின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவிடமிருந்தா இப்படியொரு ஆன்மிக படைப்பு. வாவ்! மூளையிலிருந்து யோசிக்காமல் இதயத்தில் உள்ளதை அப்படியே கதையாக எழுதி காட்சிகளாக்கியுள்ளார். அதனால் தான் படமெங்கும் ஆன்மிக அதிர்வு கொட்டிக்கிடக்கிறது

ஆன்மிக வாதிகளுக்கு நிச்சயம் இப்படம் நல்ல வைப்ரேசனைக் கொடுக்கும்
3.5/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *