சாரா- விமர்சனம்

சின்னதாக ஒரு காதல் & மேரேஜ் கலாட்டா தான் சாரா

சாக்‌ஷி தன் காதலரான விஜய் விஷ்வாவை திருமணம் செய்ய முடிவெடுக்கிறார். இச்சூழலில் திருமணத்திற்கு பல தடங்கல்கள் வருகின்றன. மேலும் சாக்‌ஷியை திருமணம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செல்லகுட்டி சாக்‌ஷியைக் கடத்திச் செல்கிறார். இப்பிரச்சனை போதாதென்று, சாக்‌ஷி வேலை பார்த்த நிறுவனத்தில் முறைகேடு செய்த மிரட்டல் செல்வா சாக்‌ஷியை கொலை செய்ய திட்டமிடுகிறார். இத்தனை இடர் கடந்து சாக்‌ஷி எப்படி சேவ் ஆகிறார் என்பதே சாராவின் கதை

கதையின் நாயகியாக சாக்‌ஷி கொடுத்த கேரக்டரை நன்றாக உள்வாங்கி நடித்துள்ளார். அழகாகவும் இருக்கிறார். யோகிபாபு, ரோபோ சங்கர், விஜய் விஷ்வா, செல்லகுட்டி, தங்கதுரை உள்பட பலரும் கொடுத்த கேரக்டருக்கு உயிர் கொடுக்க முயற்சித்துள்ளனர். செல்லகுட்டி இன்னுமே தன் பெஸ்டை காட்டியிருக்கலாம்

கார்த்திக் ராஜா இசையில் சொல்லிக்கொள்ளும் படி பாடல்களோ, பின்னணி இசையோ ஈர்க்கவேயில்லை. J.லக்ஷ்மன் குமார் MFI ஒளிப்பதிவில் ஓரளவு படத்தை தேத்தியுள்ளார். ஒருசில ஷாட்களில் நன்றாக திறமையைக் காட்டியுள்ளார். ஜான் ஆபிரகாமின் எடிட்டிங் ஒகே ரகம்

மனம் கொத்தி பறவை போன்ற பல படங்கள் கல்யாணப் பெண்ணை கடத்தும் கான்செப்டில் வந்துள்ளன. அப்படங்களிலுள்ள கலகலப்பு இப்படத்தில் மிஸ்ஸிங். இருந்தாலும் ஜஸ்ட்லைக் தட் எனர்ஜி இருந்தாலே போதும் என நினைக்கும் ரசிகர்களுக்கு சாரா ஜோரா இருக்கும்.
2.5/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *