குளிர்தேசத்தில் ஒரு எமோஷ்னல் ட்ராமா
கொடைக்கானலின் ஒரு பகுதியான வட்டக்கானலில் போதை தரும் காளானை பயிரிட்டு பெரும் செல்வத்தை ஈட்டி வருகிறார் வில்லன் ஆர்.கே சுரேஷ். மேலும் சில சொத்துப் பிரச்சனைகள் கதைக்குள் வருகிறது. ஆர்.கே சுரேஷை மையப்படுத்தி நகரும் இக்கதைக்குள் ஹீரோ துருவன் எப்படி உள்ளே வந்தார்? முடிவில் வில்லனை எப்படி முறியடிக்கிறார் என்பதே வட்டக்கானலின் மீதிக்கதை
கதைக்குத் தேவையான நடிப்பைக் கொண்டு வர சற்று சிரமப்பட்டாலும், ஓரளவு சமாளித்துள்ளார் ஹீரோ துருவன். அடுத்தடுத்த படங்களில் ஜொலிப்பார் என நம்புவோம். மீனாட்சி கோவிந்த ராஜ் அட்டகாசமான நடிப்பால் நம்மை கவர்கிறார். பாடகர் மனோ கொடுத்த வேலையைச் செய்துள்ளார். வில்லனாக ஆர்.கே சுரேஷ் கனகச்சிதம். ஆடுகளம் நரேன், வித்யா ப்ரதீப், வண்ண வண்ண பூக்கள் வினோதினி, ஆர்.கே வரதராஜ், முருகானந்தம், விஜய் டிவி சரத், ஜார்ஜ் விஜய் உள்ளிட்ட எல்லா நடிகர்களும் தங்கள் கடமையைச் செய்துள்ளனர்
மாரிஸ் விஜய் பின்னணி இசையால் படத்தை தேற்றியுள்ளார். கொடைக்கானல் பின்னணியை தன் அழகான வண்ணங்களால் காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் M.A ஆனந்த்
கதையில் கொஞ்சம் பழைய வாடை அடித்தாலும் திரைக்கதையால் படத்தை சுவாரஸ்யப்படுத்த முயற்சித்துள்ளார் இயக்குநர் பித்தாக் புகழேந்தி. காட்சிகளில் அழுத்தமும், வேகமும் கூடியிருந்தால் இந்த வட்டக்கானல் இன்னும் வலிமை பெற்றிருக்கும். இருப்பினும் ஒருமுறை பார்க்கலாம்
2.75/5

