தடை அதை உடை- விமர்சனம்

பாசிட்டிவ் தலைப்பை வைப்ப்தே பூமர்த்தனம் என்ற ஜென்ஸி ஜெனரேஷனில் இப்படியொரு தலைப்போடு படம் வெளியாகியுள்ளது

படத்தின் துவக்கத்தில் வழியில் லிப்ட் கேட்கும் இரு இளைஞர்கள் ஒரு ஜீப்பில் ஏறுகிறார்கள். அந்த ஜீப் ஓட்டுபவர் இவர்களை விசாரிக்கிறார். அவர்கள் தாங்கள் எடுத்துள்ள ஒரு படத்தின் கதையைச் சொல்கிறார்கள். அந்தக் கதை…1995-ல் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு ஒடுக்கப்பட்ட குடும்பத்தை கல்வி கற்க விடாமல் ஆதிக்கச் சாதி தடுக்கிறது. ஆதிக்கச் சாதி போடும் தடைகளை ஒடுக்கப்பட்ட குடும்பம் எப்படி உடைக்கிறது என்பது அந்தக் கதை. பின்பாதியில் இப்படத்தை இவர்கள் எப்படி எடுத்தார்கள் என்பது கதையாக விரிகிறது

படத்தில் இயக்குநராக வரும் இளைஞன் இயல்பாக நடிக்க முயற்சித்துள்ளார். காமெடி செய்ய பலரும் முயற்சிக்கிறார்கள். ஆனால் பலன் கொடுக்கவில்லை. அங்காடித் தெரு மகேஷ் படத்தின் பின்பாதியில் தான் வருகிறார்.ஓரளவு மெச்சூட் ஆக நடித்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் தனது வேலையில் இன்னும் நேர்த்தியைக் கொண்டு வந்திருக்கலாம். இசை அமைப்பாளர் சாய் சுந்தருக்கும் மேற்சொன்ன வார்த்தைகள் பொருந்தும்.

துளியும் எமோஷ்னல் கனெக்ட் ஆகாத கதையும் திரைக்கதையும் பெரிய பலவீனம். நிறைய க்ளிஷே காட்சிகள் இருந்தாலும் முன்பாதியில் படம் பேசியுள்ள ஒரு விசயத்திற்காக படத்தைப் பாராட்ட் வேண்டும்

கல்வி என்ற ஆயுதம் மட்டுமே அனைத்து ஒடுக்குமுறைகளையும் உடைக்கும் என்ற கருத்தை சொன்ன மும்பாதி தான் படத்தின் மற்ற த்டைகளை உடைக்கிறது
2.5/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *