ஆரியன்- விமர்சனம்

தொடர் கொலைகளும் அதன் தொடர்பாக துப்பறிவதும் தான் ஆரியன்

இந்தக் கதையை ஹீரோ விஷ்ணு விஷால் வழியாகவும் சொல்ல முடியும். வில்லன் செல்வராகவன் வழியாகவும் சொல்ல முடியும். ஒரு டிவியின் லைவ் சோவில் வந்து தன்னைத் தானே கொலை செய்து கொள்கிறார் செல்வராகவன். அடுத்து ட்விஸ்ட் ஆக திடீரென ஒரு திரையில் தோன்றி நான் அடுத்த ஆளை கொலை செய்யப்போவதாகச் சொல்கிறார். செத்தவர் எப்படி உயிரோடு வர முடியும்? இதுவொரு ட்விஸ்ட்

மேலும் ஒவ்வொரு முறையும் அவர் ஊடகங்கள் வழியாக வந்து இன்னாரை கொலை செய்யப் போவதாகச் சொல்கிறார். அதன்படியே கொலைகளும் நடக்கிறது. இவற்றை துப்பறிந்து கண்டுபிடிக்கும் காவல் அதிகாரியாக வருகிறார் விஷ்ணு விஷால். அவர் கண்டு பிடித்தாரா. இல்லையா? என்பதே மீதிக்கதை

கதையின் நாயகனாக நல்லதொரு நடிப்பை வழங்கியுள்ளார் விஷ்ணு விஷால். இன்வெஸ்டிகேஷன் காட்சிகளில் சீரியஸ் முகத்தைக் காட்டுகிறார். ஆக்‌ஷனில் தெறி அடி அடித்துள்ளார். நாயகிகள் இருவர். இருவருக்கும் நடிப்பதற்கான வெளி பெரிதாக இல்லை. எனினும்
ஸ்ரத்தா ஸ்ரீநாத் போதிய கவனம் பெறுகிறார். மானசா செளத்ரி கொடுத்த பணியை சிறப்புற செய்துள்ளார். செல்வராகவன் நிறைய காட்சிகளில் திரைவழியே வந்தாலும் அழுத்தமான முத்திரையைப் பதிக்கிறார். கருணாகரனை இன்னும் நன்றாக யூஸ் பண்ணியிருக்கலாம்

ஒரு இன்வெட்டிகேசன் படத்திற்கு எந்த மாதிரியான பின்னணி இசை தேவையோ அதை சிறப்பாகச் செய்துள்ளார் ஜிப்ரான் வைபோதா. ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன் தேர்ந்த காட்சியமைப்பை கொடுத்து கவனம் ஈர்க்கிறார்.

குற்றம் செய்தால் அவருக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்பது நியதி. அதேநேரம் குற்றம் புரிபவரிடம் அதற்கான காரணத்தையும் பெற வேண்டும். அதைச் சரியாக கதையில் கனெக்ட் செய்துள்ளார் இயக்குநர் ப்ரவீன்K. வசனங்களிலும் நல்ல நேர்த்தி வெளிப்பட்டுள்ளது. சிற்சில கதாப்பாத்திரங்களுக்கான ரைட்டிங்கும் தரமாக அமைந்துள்ளது. சின்னச் சின்ன டீடைல்ஸும் ரசிக்க வைக்கிறது. ஒரு நல்ல திரில்லர் அனுபவமாக ஆரியன் அமைந்துள்ளது. அதேநேரம் நெஞ்சைத் தொடும் சிறந்த மெசேஜையும் சொல்லியுள்ளது

ஆரியன்- வீரியம்
3.5/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *