ஈஸ்வரனின் பூந்தோட்டமான காந்தாரா காட்டின் மற்றொரு அத்தியாயம்
இந்த சாப்டர் 1
காந்தாரா காட்டில் கிடைத்ததை உண்டு அறத்தோடு வாழ்கிறார்கள் அந்நில மக்கள். இந்நிலையில் வியாபார ஆசையில் பாங்க்ரா ஆளுகைக்கு உட்பட்ட துறைமுகத்திற்குள் அடியெடுத்து வைக்கிறார் காந்தாரா நில ஹீரோ ரிஷப் ஷெட்டி. மேலும் காந்தாரா வளத்தை குறிவைத்து இன்னொரு இனக்குழுவான கடம்பர்களும் மூர்க்கமாக இயங்குகிறார்கள். ஒருபுறம் பாங்க்ரா அரசு, மறுபுறம் கடம்பர்கள் இனக்குழு. இரு எதிரிகளையும் காந்தாரா நில மக்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதாக படம் பயணிக்கிறது
படத்தை தன் கம்பீரம் நிறைந்த நடிப்பால்.தூக்கிச் சுமக்கிறார் ரிஷப் ஷெட்டி. சண்டைக்காட்சிகளில் அவர் காட்டியிருக்கும் ஆக்ரோசம் சிலிர்க்க வைக்கிறது. நாயகியான ருக்மணி அழகாக இருக்கிறார். கிடைக்கும் சின்னச் சின்ன காட்சிகளில் தன் இருப்பை பதிவு செய்துள்ளார். ஜெயராம் நல்ல நடிப்பை வழங்க, அவரின் மகனாக வரும் பாங்க்ரா அரசன் வில்லத்தனத்தில் மிரட்டியுள்ளார். இதர கேரக்டர்கள் எல்லோரும் காடுகளின் அதிர்வை உள்வாங்கி நடித்துள்ளனர்
படத்தின் ஆதார ஸ்ருதியாக இருப்பது இசை. பேரிரைச்சலை வர வைக்கும் வாய்ப்பிருந்தும் சிறப்பாக இசைத்துள்ளார் இசைஞர். ஒளிப்பதிவாளர் ஒரு பேண்டஸி படத்திற்கான மூட்-ஐ அட்டகாசமாக தன் ப்ரேம்களுக்குள் பொருத்தியுள்ளார். எடிட்டரின் கட்ஸ் எல்லாம் சண்டைக்காட்சிகளில் நல்ல எனர்ஜியைக் கொடுத்துள்ளது
எந்த சீக்வெல் படத்தையும் முதல் பாகத்தோடு ஒப்பிடுவது ஒரு தொடர் வழக்கம். அந்த வழக்கப்படி சொல்வதாக இருந்தால் பர்ஸ்ட் பார்ட் காந்தாராவில் இருந்த எமோஷ்னல் இதில் கூடி வரவில்லை. ஆனால் விஷுவலில் பல அடி முன்னோக்கிப் பாய்ந்துள்ளது
இந்தப்பார்ட். இயக்கத்தில் காட்டிய நேர்த்தியை எழுத்திலும் காட்டியிருக்கலாம் இயக்குநர் ரிஷப் ஷெட்டி
வூஓ என்ற சவுண்ட்க்கான ஒரு சூழல் கிரியேட் ஆகும் காட்சி ஒன்று படத்தில் நம்மை அதிரச்செய்கிறது. பாங்க்ரா அரசனை முதலிலே டம்மியாக காட்டிவிட்டதால் அதன்பின் அவர் காட்டும் வீரியம் எடுபடவில்லை. எந்த உணர்ச்சிமிகு காட்சிகளும் இயல்பாக எழாமல் செயற்கையாக தெரிவது மற்றொரு மைனஸ். ஆனாலும் மேக்கிங்கில் நம்மை அசர வைத்துவிடுகிறது படம்
கதை திரைக்கதையில் இல்லாத காந்தம் காட்சியமைப்பில் இருப்பதால் நிச்சயமாக படத்தோடு ஒட்டமுடியும்
3/5
-வெண்பா தமிழ்

