ரசிகர்களை மையல் கொள்ள வைக்கிறதா இந்த மையல்?
நாயகன் சேது ஒரு ஆடு திருட்டில் ஈடுபடுகிறார். அப்போது ஊரில் தேனப்பன் ஒரு கொலை செய்கிறார். ஆடு திருடும் சேது காதல் வயப்பட்டு ஒரு வாழ்வைத் தொடர, ஒரு பக்கம் தேனப்பன் செய்த கொலைப்பழி சேதுவை நெருங்குகிறது. அதன்பின் சேது வாழ்வு என்னவாகிறது என்பதைச் சொல்கிறது மீதிப்படம்
சேது இயல்பான நடிப்பால் கவர்கிறார். அவரின் கதாப்பாத்திரத்தின் கனம் உணர்ந்து அதில் பொருந்தியுள்ளார். நாயகி சம்ரிதி தாரா கொடுத்த கேரக்டருக்கு நியாயம் சேர்த்துள்ளார். தேனப்பன், சூப்பர்குட் சுப்பிரமணி, ரத்தின கலா, ஆர்.பி பாலா ஆகியோர் நடிப்பும் கதையோடு பொருந்துகிறது
பின்னணி இசை பாடல்கள் இரண்டும் கதையோட்டத்திற்கு பெரிதும் உதவியுள்ளன. ஒளிப்பதிவாளர் தனது சிறப்பான ப்ரேமிங்கால் கதை சொல்கிறார்
முயல் வேக கதையை ஆமை வேகத்தில் சொல்லியிருப்பதும், சொன்ன விசயத்தையே திருப்பித் திருப்பிச் சொல்வதும் இந்த மையலில் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. ஜெயமோகன் எழுத்தில் இருக்கும் வீரியம் காட்சிகளிலும் இருந்திருக்கலாம். வசனத்தில் கொடிகட்டியுள்ள ஜெமோ திரைக்கதையில் இன்னுமே கனம் சேர்த்திருக்கலாம்..
மையல்- மய்யம் கொள்ளவில்லை
2.75/5
-வெண்பா தமிழ்

