குமார சம்பவம்- விமர்சனம்

ஒரு கொலை! அதைத் தொடரும் இன்வெஸ்டிகேஷனை ஜாலியான ட்ரீட்மெண்டில் சொல்லியுள்ளார் இயக்குநர் பாலாஜி வேணுகோபால்

ஹீரோ குமரன் வீட்டில் சமூகப்போராளி குமரவேல் கொல்லப்பட்டு கிடக்கிறார். குமரன் குடும்பம் தான் கொலை செய்திருக்க கூடும் என்ற பார்வையில் விசாரணையைத் துவங்குகிறார் இன்ஸ்பெக்டர் சிவா. விசாரணையின் விவரிப்பில் ஒவ்வொரு கேரக்டர்களின் நோக்கமும் பயணமும் சொல்லப்படுகிறது.

நாயகனாக அறிமுகமாகியுள்ளார் பாண்டியன் ஸ்டோர் சீரியல் குமரன். எந்த இடத்திலும் இயல்பை மீறிச்செல்லவில்லை அவரது நடிப்பு. நாயகியும் கொடுத்த வேலைக்கு குறைவைக்கவில்லை. போராளியாக வரும் குமரவேலு மிகச்சிறந்த பெர்பாமன்ஸ்-ஐ கொடுத்துள்ளார். தாத்தாவாக வரும் GM குமார் அசத்தியுள்ளார். படத்தின் பின்பாதியில் கலகல சிரிப்பிற்கு கியாரண்டி தருகிறார் வினோத்சாகர். இன்ஸ்பெக்டர் கேரக்டரில் வரும் சிவா நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளார். பால சரவணன் கவுண்டர் பல இடங்களில் வொர்க்கவுட் ஆகியுள்ளது

அச்சுவின் பின்னணி இசை இன்னும் கூர்மையாக இருந்திருக்க வேண்டும். ஒளிப்பதிவாளர் கதையின் இயல்பை மீறாது ப்ரேமிங் வைத்துள்ளார். கிரிஷ்ப்பான எடிட்டிங்கும் படத்திற்கு பலம்

கிரேஜி மோகன் ஸ்டைல் வசனங்கள் திரைக்கதைக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. படமெங்கும் இழையோடும் நகைச்சுவை தான் படத்தைத் தாங்குகிறது. போராட்டக்காரர்களை புனிதப்படுத்துவதை கிளிஷே ஏதுமின்றி டீல் செய்திருப்பது சூப்பர்! ஒவ்வொரு கேரக்டருக்கும் நல்ல ஸ்கோப் கொடுத்து எழுதியிருப்பது கூடுதல் சிறப்பு. ரைட்டிங் & ஸ்டேஜிங் என இரண்டு லெவலிலும் ஸ்கோர் செய்துள்ள குமார சம்பவம் இந்த வாரத்தின் தரமான சம்பவம்
3.25/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *