கிராமத்து சாயலில் மீண்டும் ஒரு விமல் படம்
அப்படி விமல் என்னதாய்யா செஞ்சார்? என்ற கேள்வியை படம் துவங்கியதும் ஏற்படுத்த வைக்கிறார் இயக்குநர் கேந்திரன் முனியசாமி. ஆல்ரெடி கொலை கேஸிலிருந்து வெளிவரும் விமலை தீர்த்துக்கட்ட ஒரு கும்பல் துரத்துகிறது. விமல் கூடவே இருந்து அவருக்கு எதிராக செயல்படும் நிகழ்வும் நடக்க, இந்த ஆடுபுலி ஆட்டத்தில் விமல் எப்படி ஜல்லிக்கட்டு ஆடி தப்பிக்கிறார் என்பது படத்தின் மீதிக்கதை
கிராமத்தில் இயல்பு மனிதர்களை பிரதிபலிக்கும் விமல், இப்படத்தில் கிராமத்து ஆக்சன் ஹீரோவாக பரிணமித்துள்ளார். சண்டைக்காட்சிகளில் நல்ல உழைப்பைப் போட்டுள்ளார். நாயகி சங்கீதா கல்யாண் வழக்கமான ஹீரோயினாக இல்லாமல் சற்று மாறுபட்டு வருவது ஆறுதல். முனிஷ்காந்த், பாலசரவணன் ஆகியோர் காமெடி செய்ய முயற்சித்துள்ளனர். நட்டி நட்ராஜ் வழக்கமான நடிப்பைக் கொடுத்துள்ளார்
டி.இமானின் இசை படத்திற்கு பெரிதாக கைகொடுத்துள்ளது. பாடல்களும், பேக்ரவுண்ட் ஸ்கோரும் பிரமாதம்! ஒளிப்பதிவாளர் நல்ல விஷுவலை கொடுத்துள்ளார். வடப்போட்டி காட்சிகளில் கேமராமேனின் உழைப்பு தெரிகிறது
கிராமத்து கதையில் விமலை பார்த்து நாட்களாயிற்று. அவரது மீட்டரிலே இப்படத்தை இயக்குநர் அணுகியிருக்கலாம் என தோன்றியது. வழக்கமான பழிவாங்கும் கதை என்பதால் படம் மீது பெரிய ஈடுபாடு தோன்றவில்லை. சின்னச்சின்ன சமரசங்களை செய்துகொள்ள தயார் என்றால் இந்த வடம் உங்கள் மனம் தொடும்
2.75/5
-வெண்பா தமிழ்

