சினிமா பாரடைஸ்னு ஒரு உலக சினிமா உண்டு! எதுக்காகச் சொல்றேம்னா…சரி இந்த பாரடைஸுக்கு வருவோம்
நம் இந்திய நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்தும், ஆந்திராவில் குறிப்பிட்ட் ஒரு இனத்திற்கு விடுதலை கிடைக்கவில்லை. ஒரு சமஸ்தானத்தின் கீழ் மக்கள் பெரும் கொடுமைகளை அனுபவிக்கிறார்கள். ஹீரோ நானியின் அம்மா நானியை வயிற்றில் வைத்துக்கொண்டே அந்த வல்லாதிக்கத்திற்கு எதிராக போராடுகிறார். ஆனால் கொடூர வில்லன் நானியின் அம்மாவை சிறுமைப்படுத்துகிறார். கடினப்பட்டு தாயின் வயிற்றிலிருந்து வெளிவரும் நானி வளர்ந்த பின் தாயின் சபதத்தை நிறைவேற்றினாரா? என்பது படத்தின் ஒரு கதை. அடுத்து இன்னும் பல கதைகள் இந்தப்படக்கதைக்குள் உண்டு
இந்தப்படத்திற்காக ஒரு பேயுழைப்பைப் போட்டுள்ளார் நானி. குறிப்பாகச் சண்டைக்காட்சிகளில் அவர் எடுத்திருக்கும் ரிஸ்க் அளப்பரியது. எமோஷ்னல் காட்சிகள் வலிமையாக இல்லாவிட்டாலும் அவரின் நடிப்பில் குறையில்லை. அவரின் தாயார் கேரக்டரும் அவரின் நடிப்பும் அல்டிமேட். கயாடு லோஹர் நடிப்பைப் பற்றிச் சொல்லணுமா என்ன? அந்த அழகு தேவதை கணநேர ஷாட்களில் தரும் தரிசனம் போதாதா? வில்லன்கள் இருவரும் மிரட்டியுள்ளனர். கீர்த்தி சுரேஷ் ஒரு பாடலுக்கு வந்து செம்ம குத்தாட்டம் போட்டுள்ளார்
படத்தின் பெரிய ஹீரோவாக பேக் தி கேமராவில் இருப்பது கேமராமேன் தான். அவரின் பிரம்மாண்டமான விஷுவல்ஸ் மிரட்டுகிறது. வரைகலை வேலைப்பாடும் கவனிக்க வைக்கிறது. ஆங்காங்கே தூங்கிவழியும் படத்தை தாங்கிப்பிடித்து கரை சேர்க்கிறார் நம் அனிருத். பாடல்களிலும் நல்ல வைப்
பான் இண்டியா படங்களின் வொர்ஸ்ட் வரிசையில் அமைந்துள்ள கதை தான் இந்தப்படத்தின் கதையும். எமோஷ்னல் கனெக்டிங்கில் மொத்தமாக கோட்டை விட்டிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடிலா. எடுக்கப்பட்ட காட்சிகள் எல்லாம் பிரமாதமாக இருக்கிறது. ஆக விஷுவல் விரும்பிகள் மட்டும் என்சாய் பண்ணலாம்
2.75/5
-வெண்பா தமிழ்

