பிரஸ்மீட்டில் விஜய்சேதுபதி சொன்ன ஸ்வீட் மெசேஜ்

சமீபத்தில் நடைபெற்ற தலைவன் தலைவி பிரஸ்மீட்டில் விஜய்சேதுபதி, இயக்குநர் பாண்டிராஜுக்கும் தனக்கும் நிகழ்ந்த அன்பைப் பற்றி அழகாகப் பேசினார். சர்ப்ரைஸ் ஆக முதலில் இயக்குநர் பாண்டிராஜுக்கும் தனக்கும் செட் ஆகுமா என்ற தயக்கம் இருந்ததாகச் சொன்னார். ஆனால் அப்படியான சம்பவங்கள் எதுவுமே நடக்காமல் படம் அழகாக நிறைவடைந்தது என்ற விஜய்சேதுபதி, இந்தத் தலைவன் தலைவி தனக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக உள்ளது என்றும் சொன்னார். மேலும் சத்யஜோதி நிறுவனத்தோடு இணைந்து படம் பண்ணுவது தனக்குப் பெருமை என்றும் சொன்னார். எதையும் நேரடியாகப் பேசிவிடும் விஜய்சேதுபதியின் அன்றையப் பேச்சு பலருக்கும் வழக்கம் போல நல்ல அனுபவமாக இருந்தது. படம் வருகின்ற 25-ஆம் தேதி வெளியாகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *