தாய்நிலம் தாண்டி வாழ்நிலம் தேடும் அப்பாவுக்கும் மகளுக்கும் அடைக்கலம் தந்ததா நம் தொப்புள்கொடி நிலம்?
இலங்கைப் போரினால் மனைவியை இழந்து, மண்ணை துறந்து தன் மகள் நேஹா அமரோடு தமிழகம் வருகிறார் படத்தின் நாயகன் அமர் ராமச்சந்திரன். அன்பையும் அரவணைப்பையும் பற்றிக்கொள்ளும் பொருட்டு தமிழகத்தில் சுற்றும் அவருக்குப் பற்றிக்கொள்ள கரங்களும், அன்புகொள்ள உறவுகளும் கிடைத்தனவா? என்பது படத்தின் கதை
கதையின் நாயகனாக அமர் ராமச்சந்திரன் பிரமாதமாக நடித்துள்ளார். நேஹா அமர் வலிகளை தன் விழிகள் வழியே கடத்தி ஸ்கோர் செய்கிறார். ஏனைய கேரக்டர்களில் வரும் பாலாசிங், நிமிஷா நம்பியார், தீபக், பத்மஜா அமர் உள்ளிட்ட மற்றும் பலர் நன்றாக நடித்துள்ளனர்
இசைஞர் கதை சொல்லும் உணர்வுகளை தன் இசைவழியே சொல்ல பெரும் முயற்சியெடுத்துள்ளார். ஒளிப்பதிவாளர் இன்னும் நல்ல நல்ல ஷாட்ஸை கொடுத்திருக்கலாம்
ஈழத்தமிழ் நிலத்தை நினைத்தாலே நெஞ்சம் நடுங்கும். அத்தகைய கொடூரத்தை அவர்கள் சந்தித்துள்ளனர். அந்த வலியை எத்தனை மொழியில் சினிமாவாக எடுத்தாலும் நாம் வரவேற்க வேண்டும். ஆகையால் இந்தப்படத்தின் திரைமொழியில் பல்வேறு குறைகள் இருந்தாலும், இந்த தாய்நிலத்தை ஆதரிக்க வேண்டியது நம் தமிழ் நிலத்தின் கடமை!
இயக்குநர் அபிலாஷின் அடுத்தடுத்த முயற்சி இன்னும் பெரிதாக இருக்கட்டும்
3/5
-வெண்பா தமிழ்

