இருவாரங்களாக தமிழ் சினிமாவிற்கு பூஸ்ட் எனர்ஜியைக் கொடுத்துள்ளது தாய்கிழவி படம். படம் குறித்த பாசிட்டிவான விசயங்களை மக்களே கையிலெடுத்து பரப்பி வருகிறார்கள்..இச்சூழலில் இன்று படத்தின் வெற்றிவிழா சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது..படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் இயக்குநர் சிவக்குமார் முருகேசன் மற்றும் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்
விழா மேடையை மேடையில் பேசிய அனைவருமே நெகிழ்வாக்கினர். நிறைய எளிய பின்னணி உள்ள கலைஞர்கள் இந்த மேடையை அலங்கரித்தனர். சிவகார்த்திகேயன் இதுதான் தனக்கு கிடைத்த வெற்றி என்று உருகினார். மேலும், “இயக்குநர் சிவக்குமார் முருகேசனின் அப்பா படம் முடிந்து வந்து என்னையும் இயக்குநரையும் கட்டிப்பிடித்தார். அப்போது என் அப்பா இன்னும் சாகவில்லை என்று நினைத்தேன்” என்றார். SK பேசிய இந்த வார்த்தைகள் நிகழ்வை நெகிழ்வுக்கு அழைத்துச் சென்றது. நீண்டநாட்கள் கழித்து கோடம்பாக்கம் ஒரு நிஜ வெற்றியை ருசித்துள்ளது

