அதிகாரத்திற்கு எதிராக எழுப்பப்படும் இளைஞனின் குரல் இந்த ரெட்லேபில். ஒரு சாதா கதையில் ஸ்பெசல் சாதாவாக ஒரு விசயத்தைச் சேர்த்துள்ளனர்
நாயகன் லெனின் கல்லூரி மாணவர். அவர் கல்லூரியில் நடக்கும் அட்டூழியங்களை காலேஜ் தேர்தலில் வென்று சரிசெய்ய நினைக்கிறார். அவருக்கு எதிரணியில் இருப்பவர் கரூர் எம்.எல்.ஏ ஆர்.வி. உதயகுமாரின் மகன். அதிகார வர்க்க இளைஞனை எதிர்த்து எளிய ஹீரோ எப்படி ஜெயிப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்படுகிறது, ஹீரோவுக்கு உறுதுணையாக ஆர்.வி. உதயகுமாரின் மகள் அஸ்மினே வருகிறார். ஹீரோவுக்காக தன் சொந்த அண்ணனையே எதிர்க்கும் அவரின் முடிவின் மூலம் அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதி திரைக்கதை
கதையின் நாயகனாக ஹீரோ லெனின் ஓரளவு தேறியுள்ளார். இன்னும் நடிப்பில் அவர் முன்னேற்றம் காண வேண்டும். அதற்கான பயிற்சிகளை அவர் மேற்கொள்வார் என நம்புவோம். நாயகி அஸ்மின் ஒரு சில காட்சிகளில் ஒகே. சில காட்சிகளில் அவர் இன்னும் வலிமையான நடிப்பை கொடுத்திருக்க முடியும். ஆர்.வி. உதயகுமார் வில்லனாக நல்ல நடிப்பையே கொடுத்துள்ளார். ஏனைய நடிகர்களில் பலர் கொடுத்த வேலையைச் செய்யவே சிரமப்பட்டுள்ளனர்
கதையின் போக்கை உணர்ந்து இசைத்துள்ளார் இசையமைப்பாளர் கைலாஷ் மேனன். சதீஷ் மெய்யப்பனின் ஒளிப்பதிவில் ஓரளவு தரமுள்ளது
வழக்கமான கதையாக இருந்தாலும் ஹீரோயின் எடுக்கும் முடிவு Good move எனச்சொல்லலாம். திரைக்கதையில் இதுபோல் இன்னும் நிறைய இன்ட்ரெஸ்டிங்கான விசயங்களைச் சேர்த்திருக்கலாம். காதல், கல்லூரி தேர்தல், அரசியல்வாதி மோதல் என பல டெம்ப்ளேட்டுகள் ஆர்டிபிஷியலாக அமைந்துள்ளது. இருப்பினும் எளியவர்களின் சின்ன முயற்சிகளைப் பாராட்ட வேண்டும்
2.75/5
-வெண்பா தமிழ்

