தந்தை மகன் பாசத்தைச் சொல்லியிருக்கும் மற்றொரு சினிமா
பிரபுவிற்கு தன் மகன் வெற்றி என்றால் உயிர். மகன் வெற்றிக்கும் தந்தை மீது அவ்வளவு பாசம். வெற்றிக்கு அநியாய வட்டிக்கு விடும் வில்லன் குருப்பால் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. அந்தப்பிரச்சனையில் இருந்து தந்தையும் மகனும் மீண்டார்களா என்பது ஒருகதை. இந்தக் கதைக்குள்ளே ஹீரோ ஹீரோயின் காதல் கதையும் இருக்கிறது
ரொம்ப நாட்களுக்குப் பின் பாசமுள்ள அப்பாவாக ஸ்கிரீனில் பிரபுவைப் பார்க்கிறோம். மகனோடு பல காட்சிகளில் அவர் வந்தாலும், மகளோடு பேசும் ஒரு காட்சியில் அசத்தியுள்ளார். வெற்றியிடம் இன்னும் வீரியமான நடிப்பு வெளிப்பட்டிருக்க வேண்டும். ஹீரோயின் கிருஷ்ணபிரியா மிரட்டலாக நடித்துள்ளார். கிராமத்து முகம் கொண்ட அவர் மட்டுமே கேரக்டரோடு பொருந்தியுள்ளார். லிவிங்ஸ்டன் கேரக்டரிலும் நடிப்பிலும் செயற்கைத்தனம் மிகுதியாக இருக்கிறது. இமான் அண்ணாச்சி, ஆர்.வி உதயகுமார், மன்சூர் அலிகான் ஆகியோர் படத்தில் இருக்கிறார்கள் அவ்வளவே
எஐ எஸ். நெளஃபல் ராஜாவின் இசையில் பாடல்கள் பெரிதாக வொர்க் ஆகவில்லை. “உம்மா தர்றேன் அம்மா ஆகுறியா” என்ற பாடல் ஹெவி ஷாக்கிங். ஒளிப்பதிவாளர் ஆலிவர் டெனி கிராமத்து அழகை அள்ளித் தந்திருக்கிறார். எடிட்டர் இன்னும் ஷார்ப்பாக படத்தைக் கத்தரித்திருக்கலாம்
அப்பா மகன் எமோஷ்னல், காதல் எமோஷ்னல், பணம் சார்ந்து நடக்கும் விசயம் என படத்தின் திரைக்கதை நிறைய கிளைகளாக விரிகிறது. ஆனால் எதுவுமே ஒழுங்கான கோர்வையுடன் இல்லை. நல்ல அப்பா மகன் செண்டிமெண்ட் படமாக மாறுவதற்கு நிறைய வாய்ப்பிருந்தும் இயக்குநர் மகா கந்தன் கோட்டை விட்டுள்ளார். சிற்சில சுவாரஸ்யங்களே போதும் என்பவர்களுக்கு இந்த ராஜபுத்திரன் வொர்க்கவுட் ஆகலாம்
2.5/5
-வெண்பா தமிழ்

