தொலைந்த யானையை மீட்டெடுக்கும் நாயகன்
பொள்ளாச்சி அருகேயுள்ள கிராமத்தில் கஸ்தூரிராஜா தன் மகள் மற்றும் மகனோடு வாழ்ந்து வருகிறார். அவரிடம் ஒரு யானையும் உண்டு. வறுமையின் பிடி அவரை இறுக்குவதைக் கண்டு அவரது மகனான சண்முகபாண்டியன் அந்த யானையை வைத்துச் சம்பாதிக்க நினைக்கிறார். அச்சூழலில் யானையால் அவருக்கு ஒரு பிரச்சனை நடக்கிறது. அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் திரைக்கதை
கதையின் நாயகனான சண்முகப்பாண்டியன் நடிப்பில் இன்னும் முதிர்ச்சி தேவை. எமோஷ்னல் காட்சிகளில் சற்றுத் தடுமாறவே செய்கிறார். மேலும் அவரின் உடல்வாகு கண்கள் ஆகியவை அவரின் சிறப்பான எதிர்காலத்தை எடுத்துரைக்கின்றன. நாயகி போதுமான நடிப்பை வழங்கியுள்ளார். கஸ்தூரிராஜா இயல்பாக நடித்துள்ளார். ஏனைய கேரக்டர்கள் ஒகே ரகம்
ஒளிப்பதிவில் நிறைய சாகசங்களைச் செய்திருக்கலாம். கேமராமேன் ஏனோ கோட்டைவிட்டுள்ளார். மேலும் இளையராஜா தான் இசை என்பது டைட்டிலில் தான் தெரிகிறது. படத்தில் தெரியவில்லை
யானைக்கும் நாயகனுக்குமான எமோஷ்னல் கனெக்டிங்கை படத்தில் இயக்குநர் காட்டவேயில்லை. அதனாலே படம் நமக்குள் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆங்காங்கே வரும் விஜயகாந்த் ரெபரன்ஸ் மட்டும் தான் ஆறுதல்
2.5/5
-வெண்பா தமிழ்

