ஜிவி பிரகாஷ் முன்பு நிஞ்ஜா படத்தின் இசைஞர்..இப்ப ஹீரோவும்!

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்களான ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் சீன் ரோல்டன் இணையும் ‘நிஞ்ஜா’ திரைப்படம் புதிய பரிமாணத்தில் உருவாகிறது. இந்த கூட்டணி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

முதலில் இப்படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ஜி.வி. பிரகாஷ் குமார், தற்போது இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ‘தலைவர் தம்பி தலைமையில்’, ‘லவ் டுடே’, ‘பார்க்கிங்’ உள்ளிட்ட படங்களில் நடித்துப் பாராட்டைப் பெற்ற பிரார்த்தனா கதாநாயகியாக நடிக்கிறார். முருகு எழுதி இயக்கும் இப்படத்தை சோல்ஜர்ஸ் ஃபேக்டரி மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்‌ஷன் நிறுவனங்களின் சார்பில் எஸ். சாய் தேவானந்த் மற்றும் கே.எஸ். சினிஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

‘நிஞ்ஜா’ படத்தின் படப்பிடிப்பு இன்று (ஆகஸ்ட் 24) தஞ்சாவூரில், ஸ்ரீபதி சினிமாஸில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. முதல் கட்ட படப்பிடிப்பு 20 நாட்கள் நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *