மணிரத்னம் இயக்கிய நாயகன்’ (21/10/1987)வெளிவந்து இன்றோடு 38 வருடங்கள் ஆகின்றன.திரு.முக்தா சீனிவாசன் & திரு.முக்தா ராமசாமி அவர்களது முக்தா பிலிம்ஸ் தயாரிப்பில் மணிரத்தினம் இயக்க, இசை இளையராஜா( 400 வது படம் )
1988 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதிற்காக இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டது
மூன்று தேசிய விருதுகளை வென்றது.வரதராஜ முதலியார் என்பவரின் வாழ்க்கையைத் தழுவி *நாயகன்*கதை எழுதப்பட்டிருந்தது.
இளைஞனான வேலுவும் வயதான வேலு நாயக்கரும் திரையில் உயிர் பெற்றிருந்தார்கள்..
” நாளைக்கு கணக்கு பரிட்சை சீக்கிரமா விட்டுடுவீங்களா ” என்று கேட்கும் இடம் வலி மிகுந்த வசனம்..நடிகை சரண்யாவுக்கு இது முதல் படம்.
நீங்க நல்லவரா கெட்டவரா என்னும் கேள்விக்கு, முதிர்ந்த வேலு நாயக்கரால் “*தெரியலயேப்பா*”என்று ஒற்றை பதிலை கூறிய மணிரத்தினத்தின் *நாயகன்* திரைப்படம் மறுபடியும் உங்கள் பார்வைக்கு..
மகனாக ‘நிழல்கள்’ ரவி, மகளாக கார்த்திகா, மருமகனாக,போலீஸ் அதிகாரியாக நாசர் மற்றும் வீ. கே. ராமசாமி, டெல்லி கணேஷ், ஜனகராஜ், குயிலி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்

