திரைமொழி வழியாய் ஒலித்துள்ள ராஜுமுருகனின் இன்னொரு கம்பீரக்குரல் இந்த மை லார்ட்
வாடிய பயிரை கண்டதும் வாடும் எளிய கோவில்பட்டி ஹீரோ சசிகுமார். அவரின் மனைவியான சைத்ராவிற்கு வாழ்வில் ஒரு ரேஷன்கார்ட் வாங்க வேண்டும் என்பது லட்சியம். அந்த லட்சியம் நிறைவேறுவற்குள் சில ட்ராஜடி நடக்கிறது. அப்படியே கட் செய்தால் மத்திய அமைச்சர் ஆஷாசரத் கிட்னி பெயலியரால் சிகைச்சை பெற்று வருகிறார். அவருக்கு கிட்னி ட்ரான்ஸ்பர் செய்ய வேண்டும். அதற்கு மேட்ச் ஆக சசிகுமார் கிட்னி தான் இருக்கிறது. இந்த இடத்தோடு கதை சொல்வவதை நிறுத்தினால் படம் பார்க்கும் போது இன்ட்ரெஸ்டிங்காக இருக்கும்
சும்மாவே எல்லா படங்களிலும் கர்ணனாக நடிக்கும் சசிகுமார் இப்படத்தில் கர்ணனாக வாழவே செய்துள்ளார். இது அவருக்கான சட்டை..அவர் தான் அணியமுடியும். நாயகி சைத்ரா எளியபெண்ணாக நடித்து வலிமையாக ஸ்கோர் செய்துள்ளார். ஆச்சர்யப்படுத்திய நடிகர்கள் நிறையபேர் இருக்க, அவர்களில் கவிஞர் வசுமித்ரா அசத்தியுள்ளார். இணை நாயகன் ரேஞ்சில் வரும் குரு சோமசுந்தரமும் செம்ம செம்ம. இயக்குநர் கோபி நயினார் கேரக்டரும் சிறப்பு. ஆஷாசரத் வழக்கும் போல் திரையில் ஆளுமை செலுத்தியுள்ளார்
காட்சிகள் சொல்லும் ஆழத்தை தனது கேமரா கோணங்கள் மூலம் அழகாக நமக்கு கன்வே செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா. ஷான் ரோல்டன் சென்ற வாரம் வித்லவ்வில் ஸ்கோர் செய்தார். இந்த வாரம் மை லார்ட்டில்! பாடல்கள் பின்னணி இசை இரண்டுமே திரைக்கதைக்கு பேருதவி புரிந்துள்ளது
கிட்னி திருட்டு சம்பந்தமான காட்சிகள் தமிழ்நாட்டு மக்களுக்கு பலமாக கனெக்ட் ஆகும். படத்திற்கு அது பெரும்பலம். சிலபல காட்சிகளில் லாஜிக் ஓட்டைகள் இருக்கத்தான் செய்கிறது. “காசு இல்லாதவன்லாம் ஏன் கவர்மெண்ட் ஆஸ்பத்திரி பக்கம் வர்றான்” என்பது போன்ற வசனங்கள் நச் நச். நாம் எதிர்பார்த்த முடிவை எதிர்பாராத தருணத்தில் தந்து வாவ் பேக்டரை ஆங்காங்கே உறுதி செய்கிறார் ராஜுமுருகன். எளிய மனிதனின் சர்வைவல் படத்தில் நிறைய பொலிட்டிகல் விசயங்களையும் பேசி, மனிதம் பேசும் க்ளைமாக்ஸையும் வைத்து மை லார்டில் பாசிட்டிவ் தீர்ப்பை எழுதியிருக்கிறார் இயக்குநர் ராஜுமுருகன்
3.25/5

