மாஸ்க் அணிந்து நடத்தப்பட்ட கொள்ளையை எப்படி கமர்சியல் மாஸ் அணிந்து நமக்கு கடத்தியுள்ளார்கள் என்று பார்க்கலாமா?
ஒரு பெரிய சூப்பர் மார்க்கெட்டில் மாஸ்க் அணிந்தபடி கொள்ளையடிக்கிறார்கள். கொள்ளை போன தொகை 446 கோடி!! அக்கொள்ளையோடு சம்மந்தப்பட்டவர்களாக டிடெக்டிவ் கவின், நாடு கடக்க வேண்டும் என ஆசைப்படும் ஆண்ட்ரியா, தனித்துக் களம் கண்டு வெல்ல வேண்டும் என நினைக்கும் அரசியல்வாதி பவன் ஆகியோர் உள்ளனர். இதற்கான பின்னணி என்ன என்பது தான் படத்தின் கதை
ஜாலி, கேலி, எமோஷ்னல் என எந்தக் காட்சியாக இருந்தாலும் லெப்ட் ஹேண்டில் டீல் செய்து லைக் வாங்குகிறார் ஹீரோ கவின். ஆண்ட்ரியா தானொரு நடிப்புச் சுரங்கம் என இப்படம் மூலமாகவும் நிரூபித்துள்ளார். பவன் தனக்கு வழங்கப்பட்ட களத்தை உணர்ந்து விளையாடியிருக்கிறார். கிங்ஸ்ட்லி உள்பட பிற நடிகர்களோடு சேர்ந்து நெல்சனின் வாய்ஸ் ஓவரும் படத்திற்கு எனர்ஜி ஏற்றியுள்ளது
ஜிவி பிரகாஷ் வழக்கம் போல் இசையில் கோரத்தாண்டவம் ஆடியுள்ளார். பாடல்கள் பின்னணி இசை இரண்டுமே பாசிட்டிவ் நோட்டில் அமைந்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் ஆர்.டி ராஜசேகர் தனது பெரிய அனுபவத்தின் மூலம் பிரமாதமான காட்சிகளை நமக்கு வழங்கியுள்ளார்
நச் என கதையையும், ரசிக்க வைக்கும் ஐடியாக்களையும் பிடித்துள்ளார் இயக்குநர். ட்விஸ்ட் ஒவ்வொன்றும் அட சொல்ல வைக்கிறது. ஆனாலும் நேர்த்தியான திரைக்கதை படத்திற்கு சாத்தியப்படவில்லை. ஆனாலும் படம் எங்குமே நம்மை தேங்கவோ, தூங்கவோ விடவில்லை என்பது ஆறுதல். பல மொமண்ட்ஸ்கள் சேர்ந்து நம்மை ஓரளவு என்சாய் பண்ண வைப்பதால் மாஸ்க் பாஸ் ஆகிறது
3/5
-வெண்பா தமிழ்

