லவ் ஓ லவ்- விமர்சனம்

காதலனுக்கு லாடம் கட்டும் காதலியும் காதலிக்கு பாடம் புகட்டும் காதலனும் சேர்ந்து நமக்கு லாடம் கட்டிய கதையிது

ஹீரோ பவிஷ் இந்த “நாட்டே விட்டே போறேன்” என காவலதிகாரி செல்வராகவனிடம் கெஞ்சுகிறார். “அப்போ உன் காதலிக்கு யார்றா பதில் சொல்றது?” என்று செல்வராகவன் கேட்க, பவிஷ் தான் காதலியால் நொந்த கதை ஒன்றைச் சொல்கிறார்..அதுதான் படத்தின் கதை. மிடில்கிளாஸ் நாயகன் ஹை கிளாஸ் காதலி கேட்கும் அனைத்தையும் வாங்கிக்கொடுத்து கடனாளியாகிறார். அது பெரும் பிரச்சனைகளை உண்டு பண்ணுகிறது. அதிலிருந்து ஹீரோ எப்படி மீள்கிறார் என்பதாக கதை பயணிக்கிறது

தனுஷின் குரல் மாடுலேசன், உடல் மாடுலேசன் என அனைத்தையும் ஸ்கிரீனில் காபிபேஸ்ட் செய்துள்ளார் நடிகர் பவிஷ். எமோஷ்னல் காட்சிகளில் தடுமாறவே செய்கிறார். நாயகி நாகதுர்கா ஒகேவாக நடித்துள்ளார்..அறிமுகபடம் என்பதால் நல்ல முன்னேற்றம் எனலாம். கே.எஸ்.ரவிகுமார், செல்வராகவன், வனிதா, மற்றும் பலர் கொடுத்த வேலைக்கு குறைவைக்கவில்லை

PG.முத்தையா ஒளிப்பதிவை கச்சிதமாகச் செய்துள்ளார். நிறைய ஷாட்களில் இளமை ததும்புகிறது. பாக்ஸின் இசை பெரிதாக சாதிக்கவில்லை என்றாலும் சோதிக்கவில்லை என்பதே ஆறுதல். பாடல்கள் ஜஸ்ட் பாஸ் ஆகின்றன

பெண்ணை ஆண் குறை சொல்லி கழுவி ஊற்றுவதும், ஆணை பெண் குறைசொல்லி கழுவி ஊற்றுவதே திரைக்கதை என முடிவெடுத்துள்ளார் இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன். படத்தில் சொல்லப்படும் எநத நியாயத்திலும் கன்வின்சிங் ஏற்படுவதேயில்லை. வெறும் சம்பவங்களின் தொகுப்பாகவே விரியும் திரைக்கதை நம்மை என்கேஜ் செய்யவில்லை. மெனக்கெடல் இல்லாத கலைஞர்களை எப்படி மெனக்கெட்டு போய் பார்ப்பது? நான்கு நச் காட்சிகள் இருந்தாலே போதும் என்பவர்களுக்கு இந்த லவ்வோ லவ் ஈர்க்கலாம்
2.5/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *