சென்னை புரொடக்க்ஷன்ஸ் எழில் இனியன் தயாரிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ” காத்து வாக்குல ஒரு காதல் “.
கதையின் நாயகனாகவும் மாஸ் ரவி நடித்து இயக்கி உள்ளார். கதா நாயகிகளாக லட்சுமி பிரியா, மஞ்சுளா, மற்றும்
சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, கல்லூரி வினோத், ஆதித்யா கதிர், தங்கதுரை, சத்யா,பவர் ஸ்டார், கபாலி விஸ்வந்த்,
மேனக்சன் மிப்பு மொசக்குட்டி, சஞ்சனா சிங், பிரியதர்ஷினி, பிரியங்கா, ரோபோ சங்கர், மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ” சிங்கிளா இருந்தா சிங்கம் மச்சான் ” எனும் பாடலை சிறப்பாக தேனிசை தென்றல் தேவா பாடியுள்ளார் மேலும் சைந்தவி, ரஞ்சித், ரம்யா பேகேரா உள்ளிட்டோரும் பாடல்களை பாடியுள்ளனர்.
U/A சான்றிதழ் பெற்றுள்ள இத்திரைப்படம் வருகிற 08-08-2025 அன்று தமிழகமெங்கும் அங்காளம்மன் பிக்சர்ஸ் வெளியீடு மூலம் திரைக்கு வரவுள்ளது.

