ஒருநொடி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் மணிவர்மன் இயக்கியுள்ள ஜென்ம நட்சத்திரம் எப்படி இருக்கு?
ஹீரோ தமனுக்கு படம் இயக்க வேண்டும் என்பது இலக்கு. அதற்கான போராட்டத்தில் இருக்கும் அவருக்கு நண்பர்கள் சப்போர்ட்டாக இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த நட்புக்கூட்டத்திற்கு 57 கோடி ரூபாய் கிடைக்கக் கூடிய சூழல் காளிவெங்கட் மூலமாக அமைகிறது. அந்த 57 கோடிக்காக பயணிக்கும் இவர்கள் வழியில் குறுக்கிடுகின்றன பேய்களும் அமானுஷ்யங்களும். முடிவில் என்னானது என்பதே கதை
தமன் வெகு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். ஒரு ஆக்சன் ஹீரோவிற்கான லீட் இந்தப் படத்தில் அவருக்கு கிடைத்துள்ளது. நாயகிகள் இருவரும் நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளனர். நண்பர்களாக வரும் அருண் உள்பட அனைவரும் கொடுத்த வேலையைத் திறம்பட செய்துள்ளனர். காளி வெங்கட் செண்டிமெண்ட் காட்சிகளில் அசத்தியுள்ளார். முனிஷ்காந்த் காமெடிக்கு உத்திரவாதம் தருகிறார்
படத்தில் இசை அமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம் எக்ஸ்ட்ரா எபெக்ட் போட்டு உழைத்துள்ளார். சில இடங்களில் சைலண்ட் காட்டி வைலன்ஸ் ஏற்றுகிறார் இசைஞர். ஒளிப்பதிவாளர் ஒரே இடத்தில் சுற்றும் கதைக்கு பல வண்ணங்கள் சேர்த்துள்ளார்.
ஒரு பேய்படமாக துவங்கும் படம் இடையில் திரில்லராக உருவெடுக்கிறது. ஹாரர் திரில்லர் வகைமைப் படமாக இப்படத்தை எடுத்துள்ளார் இயக்குநர் மணிவர்மன். படத்தின் கேரக்டர்களோடு நாம் முழுமையாக ஒன்றும் படி திரைக்கதை அமைத்திருக்கலாம். மற்றபடி பொழுது போக்கு அம்சங்கள் உள்ள பேய்படமாக ஜென்ம நட்சத்திரம் வசீகரிக்கவே செய்கிறது
3/5
-வெண்பா தமிழ்

