சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றபடம் ஹாய். கவின் நயன்தாரா காம்போவில் வெளியான இப்படத்தில் பிரபு ராதிகா பாக்கியராஜ் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். விஷ்ணு எடவன் இப்படத்தை இயக்கியிருந்தார். தயாரிப்பாளர் லலித்குமாரோடு இணைந்து இப்படத்தை தயாரித்திருந்தது நயன்தாராவின் நிறுவனம். இப்படம் போட்ட காசை எடுத்ததோடு நல்ல லாபத்தையும் கொடுத்ததால் படக்குழு ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவை நடத்தியது. விழாவில் கவின் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்
ரசிகர்களுக்கும் ஊடகத்திற்கும் நன்றி- ஹாய் பட டீம்
