குட் டே – விமர்சனம்

குடியால் விபரீதம் நிகழும் என்பதை வலியுறுத்தும் மற்றொரு சினிமா

ஹீரோ பிரித்விராஜ் தன் குடும்பச் சூழலால் திருப்பூர் பனியன் கம்பெனிக்கு வேலைக்குச் செல்கிறார். அங்கு வேலை செய்யும் மேனஜரிடம் நியாயமான காரணத்திற்காக சண்டையிடுகிறார். அதனால் வேலையில் அவருக்கு சம்பளம் வருவதில் பிரச்சனை. அதனால் குடிக்கு அடிமையாகும் பிரித்வி, முன்னாள் காதலி வீட்டிற்கும் காவல் நிலையத்திற்கும் சென்று ஏழரையைக் கூட்டுகிறார். அதனால் அவரது வாழ்வில் அடுத்தடுத்து என்ன நிகழ்ந்தது என்பதே கதை.

கதையின் நாயகனான பிரித்விராஜ் ராமலிங்கமாகவே வாழ்ந்துள்ளார். கதாப்பாத்திரத்திற்குத் தேவையான உடல்மொழியை அழகாக வழங்கியுள்ளார். மைனா நந்தினி மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அசரடித்துள்ளார். காளி வெங்கட் வழக்கம் போல் நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளார். ஆடுகளம் முருகதாஸ், பகவதி பெருமாள், வேல. ராமமூர்த்தி, போஸ் வெங்கட் உள்பட பலரும் நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளனர்

கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி கவனிக்க வைத்திருக்கலாம். மதன் குணதேவ் நல்ல விதமாக ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணியைச் செய்துள்ளார்.

பூர்ணா ஜெஸ் மைக்கேல் திரைக்கதையில் கூடுதல் உழைப்பைக் கொடுத்திருக்கலாம். இயக்குநர் N.அரவிந்தன் கிடைத்த பட்ஜெட்டில் நல்ல விதமாக படத்தை இயக்கியுள்ளார். இன்னும் சற்று பட்ஜெட் விருட்சமும், ஆர்டிஸ்ட் வெளிச்சமும் கிடைத்திருந்தால் இந்த Good day fantastic day ஆக மாறியிருக்கும். இருந்தும் இந்த குட் டேவிற்கு நீங்கள் ஒன் டேவை ஒதுக்கலாம்
3/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *