சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்ஸ்- விமர்சனம்

குறையுள்ள வில்லன்கள் ஒரு வங்கியை கொள்ளையடிக்க முயற்சித்து மொக்கை வாங்கும் கதை

கொள்ளை மூலம் பெரியாளான லிவிங்ஸ்டனிடம் சேர்கிறார் ஹீரோ வைபவ். லிவிங்ஸ்டனின் மகள் அதுல்யா ரவி மீது வைபவ் காதல் கொள்கிறார். இச்சூழலில் லிவிங்ஸ்டன் வைபவிற்கு ஒரு திருட்டு அசைன்மெண்ட்- ஐ கொடுக்கிறார். அதைக் கச்சிதமாகச் செய்வதற்காக வைபவ் ஆனந்தராஜ் டீமை நாடுகிறார். அந்த டீம் என்னென்ன பிரச்சனைகளை ஏற்படுத்தியது என்பதை காமெடியாகச் சொல்ல முயற்சித்துள்ளார்கள் இரட்டை இயக்குநர்கள் விக்ரம் ராஜேஷ்வரர் மற்றும் அருண் கேசவ்

ஷுட்டிங் பார்க்க வந்த கேப்-ல நடிச்சிட்டுப் போயிடலாம் என்ற மோடிலே நடித்துள்ளார் வைபவ். அவரிடம் ஒரு வைப் என்பதே இல்லை. ஆக்‌ஷுவலாக அது கதையிலுமில்லை. அதுல்யா ரவி பேக்கரி திறந்து வைக்க வந்த செலிபிரிட்டி போலவே திரிகிறார். ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், லிவிங்ஸ்டன், ஜான் விஜய் உள்பட்ட காமெடி டீம் நாம் எங்கும் சிரித்துவிடக்கூடாது என மெனக்கெட்டுள்ளனர். ஹீரோ நண்பராக வரும் மணிகண்டா ராஜேஷ் பரவாயில்லை.

டி.இமான் தான் இசை என்ற செய்தி ஆச்சர்யமாக இருந்தது. எப்பேர்ப்பட்ட இசைஞன்!! இப்படத்தில் டைட்டிலில் தான் இமான் இருக்கிறார். படத்தில் அவரது டச் எங்குமே இல்லை. டிஜோ டோமி ஒளிப்பதிவில் தன்னால் இயன்றதைச் செய்துள்ளார்.

படத்தில் ஹீரோவின் நோக்கத்தில் துளியும் தெளிவும் அக்கறையும் இல்லாததால் படம் தேங்கி நிற்கிறது. சுவாரஸ்யமான எழுத்து ஒரு காட்சியிலும் சாத்தியப்படவில்லை. சின்னதாக சில ஐடியாக்கள் நன்றாக தெரிந்தாலும், அவற்றைப் பிராப்பராக டெவலப் செய்யவில்லை.

சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்ஸ்- ஸ்ட்ராங் இல்லை ப்ரோ

2/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *