பாய்- விமர்சனம்

சிலிப்பர் செல் என்ற வார்த்தை தமிழக அரசியலில் முக்கியமான ஒன்று. அந்த வார்த்தையை மையமாக வைத்தே கதை நகர்கிறது

இந்தியாவெங்கும் சிலிர்ப்பல் செல்கள் குண்டு வைக்கத் திட்டமிடுகிறார்கள். தமிழகத்திலும் அந்த முயற்சி நடக்கிறது. முயற்சிக்கு மூல கர்த்தாவாக இருக்கிறார் நாயகன் ஆதவா ஈஸ்வரா. அவர் தன் மனைவிக்குத் தெரியாமல் இந்த வேலையைச் செய்கிறார். ஊருக்குச் சென்ற மனைவி திடீரென வீட்டிற்கு வருவதாக ஆதவா ஈஸ்வராவிற்கு போன் செய்கிறார். உடனே இந்த வேலையை தன் மனைவி தெரிந்துகொள்ளக் கூடாது என்பதற்காக வீட்டிற்கு விரைகிறார் ஹீரோ. ஆனால் வீட்டில் அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அது என்ன என்பதும் அந்த அதிர்ச்சிக்கு நம் ஹீரோவின் ரியாக்சன் என்ன என்பதுவுமே படத்தின் மீதி திரைக்கதை

கதையின் நாயகனாக ஆதவா ஈஸ்வரா போதிய நடிப்பை கொண்டு வர முயற்சி செய்துள்ளார். அவர் போலவே அத்தனை கேரக்டர்களும் முயற்சி மட்டுமே செய்துள்ளனர். யாருடைய நடிப்பும் அட என்று சொல்லும் அளவில் இல்லை. அதே சமயம் மோசமாகவும் இல்லை

ஒரே வீட்டிற்குள் நடக்கும் கதை என்பதால் ஒளிப்பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி ரொம்பவே சிரமப்பட்டுள்ளார். எடிட்டர் கட்ஸ்களில் ஏகத்திற்கும் சொதப்பியுள்ளார். ஜித்தன்.கே.ரோஷன் அதிகமான இரைச்சலையே இசையாக தந்துள்ளார்

கதையாக ஒரு புதிய பாயிண்ட்-ஐ பிடித்த இயக்குநர் திரைக்கதையாக அதை மெயிண்டெண்ட் பண்ணத் தவறிவிட்டார். மேக்கிங்கிலும் இன்னும அழுத்தம் சேர்த்திருக்கலாம். செம்ம பாய் என்ற சொல்ல விடாமல் அட போங்க பாய் எனச் சொல்ல வைத்துவிட்டார் இயக்குநர் கமலநாதன் புவன்குமார்
2/5
-வெண்பா தமிழ்

#Bhai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *