‘அப்பா குட்டி’ படத்தின் ஆடியோவை கைப்பற்றிய விஜய் ஆண்டனி

இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகும் இந்த ஆக்‌ஷன் குடும்பத்திரைப்படம், நவம்பர் 6, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தப் படத்தின் ஆடியோ உரிமையை விஜய் ஆண்டனி மியூசிக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாகப் பெற்றுள்ளது.

தனித்துவமான இசை மற்றும் பல ஹிட் பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் விஜய் ஆண்டனி.இந்தப் படத்திற்கும் அவரே இசையமைத்துள்ள நிலையில் அதன் ஆடியோ உரிமையை அவரது சொந்த இசை நிறுவனம் பெற்றிருப்பது முக்கியத்துவம் பெற்று இருக்கின்றது.

விஜய் ஆண்டனியின் திரைப்பயணத்தில் இசைக்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு. அந்த வகையில், ‘அப்பா குட்டி’ படத்தின் இசையும் கதையின் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அப்பாவுக்கும் மகளுக்கும் இடையிலான அன்பு தியாகம் மற்றும் பாசத்தை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில், உணர்ச்சிகரமான காட்சிகளுக்கும் ஆக்‌ஷன் காட்சிகளுக்கும் இசை கூடுதல் பலம் சேர்க்கும்.

மு.மாறன் எழுதி இயக்கியுள்ள ‘அப்பா குட்டி’ குடும்பத்தின் உணர்வுகள்,விறுவிறுப்பான ஆக்‌ஷன் மற்றும் உணர்ச்சிகரமான காட்சிகள் நிறைந்த திரைப்படமாக உருவாகி இருக்கின்றது.அப்பாவுக்கும் மகளுக்கும் இடையிலான பிரிக்க முடியாத பாசப் பிணைப்பே படத்தின் கருவாகும்.

இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்,தனது தனித்துவமான நடிப்பு மற்றும் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதன் மூலம் கவனம் பெற்றுவரும் அவர்,இந்தப் படத்திலும் வலுவான நடிப்பை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கெனவே வெளியான படத்தின் விளம்பர விஷயங்கள் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன. முக்கியமாக விஜய் ஆண்டனியும் ஒரு சிறுமியும் இடம்பெற்ற Second look போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

படத்தின் திரையரங்கு வெளியீட்டு உரிமையை பிரபல விநியோகஸ்தர் 5 ஸ்டார் செந்தில் பெற்றுள்ளார். தற்போது ஆடியோ உரிமையையும் விஜய் ஆண்டனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

ஆடியோ உரிமை உறுதியாகியுள்ள நிலையில், விரைவில் படத்தின் பாடல்கள் மற்றும் இசை தொடர்பான விளம்பர அறிவிப்புகள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

இந்தப் படத்தில் ப்ரீத்தி அஸ்ரானி, பேபி லித்தன்யா, பகவதி பெருமாள் (பக்ஸ்), ஹரிப்ரியா இசை, அருவி மதன், சித்ரா லட்சுமணன், ஸ்ரீஜா ரவி, வேட்டை முத்துக்குமார், ஜென்சன் திவாகர்,வேட்டை முத்துக்குமார், முருகானந்தம், மூணாறு ரமேஷ், லிஸ்ஸி ஆண்டனி, குமார் நடராஜன், விஜயன், பிரவீனா, ஹரிதா மற்றும் ஹரிப்ரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழுவில் விஜய் ஆண்டனி இசையமைப்பதுடன் படத்தொகுப்பையும் செய்கிறார். ராஜீவ் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஆடியோ உரிமையை விஜய் ஆண்டனி மியூசிக் நிறுவனமும், திரையரங்கு வெளியீட்டு உரிமையை 5 ஸ்டார் செந்திலும் பெற்றுள்ள நிலையில், ‘அப்பா குட்டி’ திரைப்படம் நவம்பர் 6, 2026 அன்று உலகம் முழுவதும் வெளியாகத் தயாராகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *