மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது தனுஷின்“அம்பிகாபதி”!

இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில், இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையில், முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ் மற்றும் சோனம் கபூர் நடிப்பில், 2013 ஆம் வெளியான படம் “அம்பிகாபதி”. இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்படத்தினை, UPSWING ENTERTAINMENT PRIVATE LIMITED நிறுவனம், புத்தம் புதிய நவீன தொழில் நுட்பத்துடன், AI தொழில்நுட்பத்தில் புதிய கிளைமேக்ஸ் காட்சிகள் உடன் வரும் ஆகஸ்ட் 01ஆம் தேதி மீண்டும் தமிழகமெங்கும் வெளியிடவுள்ளது.

தமிழில் முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ் இந்தியில் அறிமுமகமான முதல் திரைப்படம் இதுவென்பது குறிப்பிடதக்கது. இந்தியில் “ராஞ்சனா” என்ற பெயரில் வெளியான இப்படம் 100 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்தது.

இப்படம் தமிழில் “அம்பிகாபதி” என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. இங்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், தமிழகமெங்கும் பெரும் வசூல் வெற்றியைக் குவித்தது குறிப்பிடதக்கது.
இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசை, பட்டி தொட்டி எங்கும் வரவேற்பைப் பெற்று இன்றளவும் கொண்டாடப்படுகிறது.

ஒரு நடுத்தர வர்க்கத்து இளைஞனின் ஒரு தலைக்காதலைச் சொல்லும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் கல்ட் கிளாசிக்காக கொண்டாடப்படுகிறது. இப்படம் தற்போது நவீன தொழில் நுட்பத்தில் பல்வேறு காட்சிகள் மெருக்கேற்றப்பட்டு, AI தொழில்நுட்பத்தில் புதிய கி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *