ஆல்பாஸ்- விமர்சனம்

பணம் படுத்தும் பாட்டை வைத்து ஒரு கதையைப் பின்னியுள்ளார் இயக்குநர் மைதீன்

வறுமைக்கு வாக்கப்பட்டு வாழும் மூன்று குடும்பங்கள். சென்னை குடிசைமாற்று வாரியப் பகுதியில் வாழும் அவர்களின் பிள்ளைகளுக்கு தனியார் பள்ளியில் கல்வி பயில வேண்டும் என்பது ஆசை. ஆனால் அதை நிறைவேற்றும் பொருளாதாரம் மூன்று குடும்பங்களிடமும் இல்லை. இச்சூழலில் மூவர் குடும்பத்திற்கும் மொத்தமாக ஐந்துகோடி கிடைக்கிறது. பணத்திற்காக போராடியவர்களின் மனநிலை பணம் வந்தபின் எப்படியெல்லாம் மாறுகிறது என்பதை திரைக்கதையாக்கியுள்ளார் இயக்குநர் மைதீன்

ஜனனி நடிப்பில் போதிய ஆழமில்லா விட்டாலும் மோசமில்லை. ஜெயபிரகாஷ் இயல்பாக நடித்து ஈர்க்கிறார். செந்திகுமாரி, சுப்பிரமணிய சிவா, வினோதினி, பிரசன்ன பாலச்சந்திரன், மோகனா ஆர், சத்யா, சஞ்சய் ஆகியோர் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்துள்ளனர்

தில்ராஜு ஒளிப்பதிவைச் செய்துள்ளார். கிடைத்த லைட்டிங் எக்யூப்மெண்ட்ஸை வைத்து சிறப்பான விஷுவலை வழங்கியுள்ளார். ஜேம்ஸ் வசந்தன் நல்ல இசையைத் தரவல்லவர். சிறப்பாக கொடுத்துள்ளார்

படத்தின் கதை தேவையான ஒன்று தான். திரைக்கதை மேக்கிங் இரண்டும் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். இருந்தாலும் மனித மனங்களின் சஞ்சலங்களை கண்முன் நிறுத்திய இந்தக் களத்திற்காக ஆல்பாஸ் படத்திற்கு நாம் பாஸ்மார்க் போடலாம்
3/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *