பெமினிசம் குறித்த சரியான பாடத்தை எடுத்துள்ளது படம்
ஹீரோ ரியோ ஹீரோயின் மாளவிகா மனோஜ் இருவரும் அரேஞ் மேரேஜ் செய்து கொள்கின்றனர். ஒருமித்த அன்போடு வாழ்க்கை துவங்குகிறது. திருமணத்திற்கு முன்பே தானொரு பெமினிஷ்ட் என அடையாளப்படுத்திக் கொள்கிறார் நாயகி. நாயகனும் So what OK என்று சோல்டரை சுருக்கிக் கொள்கிறார். வாழ்வு பயணப்படுகிறது.
தனக்கான சுதந்திரத்தை தனக்கான அதிகாரம் என்று ஒருவர் எல்லை மீறும் போது அங்கு இதயங்கள் நொறுக்கப்படும்; மனசாட்சி மறக்கப்படும். அதுதான் ரியோவையும் மாளவிகாவையும் டிவோர்ஸ் நோக்கித்தள்ளுகிறது. அதன்பின் படம் வழக்கமான க்ளைமாக்ஸோடு முடிகிறது
ரியோ நேர்த்தியான நடிப்பை வழங்கியுள்ளார். சகிப்புத்தன்மையை வெளிப்படுத்தும் காட்சிகளில் அட்டகாசமான நடிப்பைக் கொடுத்துள்ளார். அழகுப்பதுமையாக வரும் மாளவிகா மனோஜ் எமோஷ்னல் காட்சிகளில் சோகமுகம் காட்டி மனதை இளகச் செய்கிறார். RJ விக்னேஷ் படத்தின் இன்னொரு ஹீரோவாக ஸ்கோர் செய்து அசத்தியுள்ளார். ஷீலா, ஜென்சன் திவாகர் உள்பட எல்லாக் கேரக்டர்களும் தேவையான நடிப்பை வழங்கியுள்ளனர்
எளிமையான படம் என்பதை எல்லா ப்ரேமிங்கும் காட்டுகிறது. ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம் சரியான உழைப்பைக் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் சித்துகுமார் படம் வேண்டி நிற்கும் RR மட்டுமே கொடுத்துள்ளார் சிறப்பு. KG வருணின் கிரிஷ்ப்பான எடிட்டிங்கும் படத்திற்கு பலம்
சின்ன கதையை நல்ல எமோஷ்னல் திரைக்கதையாக ரைட்டிங்கில் கொண்டு வந்துள்ளார் இயக்குநர் சிவகுமார் முருகேசன். க்ளைமாக்ஸ் காட்சியில் கேரக்டர்கள் பேசும் வசனங்கள் அனைத்துமே அல்டிமேட். பெண்களுக்கான சுதந்திரத்தை பேசும் அதே அளவில், ஆண்களின் நியாயத்தையும் பேசியிருப்பது அசத்தல் ரைட்டிங். கூடுதலாக கடமையை அடிமைத்தனம் என்றும், ஈக்குவாலிட்டி என்ற பெயரில் நடைபெறும் ஈகோ வக்கிரத்தையும் பொட்டில் அடித்துள்ளார் இயக்குநர்.
உலகம் அன்பால் ஆனது. ஒருவரை ஒருவர் குற்றப்படுத்தி குளிர் காய்வது எப்போதுமே வாழ்விற்கு அழகல்ல. வாழ்வின் அழகே விட்டுக்கொடுத்தல் தான் என்பதைச் சொல்லிருக்கும் இந்தப் படம் தான் இந்த வீக் என்ட் வின்னர்
3.5/5
-வெண்பா தமிழ்

