விஜய் சேதுபதி தனது மக்கள் செல்வன் என்ற பட்டத்திற்கு நியாயம் சேர்க்கும் படியாக தலைவன் தலைவி படத்தில் நடித்துள்ளதாக படக்குழு தெரிவிக்கிறது. விசே ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளதும் படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
“தலைவன் தலைவி” திரைப்படத்தின் முதல் பாடல் “பொட்டல முட்டாயே” ஜூலை 12-அன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த பாடல் சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்றிருப்பது பட டீமிற்கு பெரும் டானிக்காக அமைந்துள்ளது.
மேலும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு விஜய்சேதுபதி படம் பற்றிப் பேசிய எல்லாமே அல்டிமேட் ரகம். அதனால் தலைவன் தலைவி நிச்சயமாக ஹிட் மெட்டிரியல் என விசே ரசிகர்கள் நம்புகிறார்கள்

