சிட்டுக்குறிஞ்சி படத்தைப் பற்றி சிறப்பு விருந்தினர் கருத்து

பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘’சிட்டுக்குறிஞ்சி’. ஃபேண்டஸி மற்றும் ரொமான்டிக் கதைக்களத்தில், இரண்டு காலக்கட்டங்களை இணைக்கும் வித்தியாசமான திரைக்கதை அமைப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவை பிரான்சிஸ் ராஜ்குமார் ஏ. மேற்கொண்டுள்ளார். இசையமைப்பாளர் மாரா இசையமைத்துள்ள இப்படத்திற்கு, ஹங்கேரியைச் சேர்ந்த புடாபெஸ்ட் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா இசைக்குழுவினரும் பங்களித்துள்ளனர். கொடைக்கானல் அருகே 80 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான கிராமம் மற்றும் பல்வேறு அரங்க அமைப்புகளை உருவாக்கிப் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இப்படம் வரும் நவம்பர் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரம், தயாரிப்பாளர் டி. ஜூட் ஆனந்த், நடிகர்கள் ரஜித் சிஆர், ஆதவன், ஜி.எம். குமார், நக்ஷா சரண், ஸ்ரீராம் கார்த்திக், வெங்கடேஷ், வி.ஜே. பப்பு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட *ஆர்.வி. உதயகுமார்* பேசுகையில்,

” படத்தின் டிரெய்லரைப் பார்க்காததால் கதைக்களம் குறித்து முழுமையாகத் தனக்குத் தெரியவில்லை என்று குறிப்பிட்டார். இருப்பினும், இப்படத்தில் பணியாற்றிய கலைஞர்களைப் பாராட்டினார். பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸின் தேசியப் பொதுச்செயலாளர் சுபாஷைப் பாராட்டிப் பேசிய அவர், நாயகன் ரஜித் சிஆர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இணைந்து இப்படத்தைச் சிறப்பாக உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்தார். திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *