அட்ரா பரமாவில் துவங்கிய ராவடி அப்டேட்!

சிறை படம் மூலம் ரசிகர்கள் மனதை சிறை பிடித்த அக்ஷயகுமார் படத்தின் அடுத்த அப்டேட் இது

மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பேசில் ஜோசப் – ‘சிறை’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர் எல். கே. அக்ஷய் குமார் ஆகிய இருவரும் இணைந்து முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் ‘ராவடி (Raawadi)’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அட்ரா பரமா..’ எனும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ராவடி (Raawadi)’ திரைப்படத்தில் பஸில் ஜோசப், எல். கே. அக்ஷய் குமார், ஜான் விஜய்,  ஜாபர் சாதிக், நோபல் கே. ஜேம்ஸ், ஷாரிக் ஹாசன், அருணாச்சலேஸ்வரன் PA., சத்யன், ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளைப் பரத் விக்ரமன் மேற்கொள்ள, தயாரிப்பு வடிவமைப்பாளராகப் பி. எஸ். ஹரிஹரன் பணியாற்றியிருக்கிறார். கமர்ஷியல் என்டர்டெயினராகத் தயாராகியிருக்கும் இந்தத் திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார் தயாரித்திருக்கிறார். இப்படத்திற்கு எல். கே. விஷ்ணுகுமார் இணைத் தயாரிப்பாளராகப் பொறுப்பேற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *