நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணா’ திரைப்படத்தின் இசைப் பயணத்தில் மற்றுமொரு அழகான படைப்பாக ‘மங்கள வண்ணமே’ பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடல், ராமர் மற்றும் சீதையின் வாழ்க்கைப் பயணத்தை அழகிய காட்சிகள் மூலம் நம் கண்முன் கொண்டுவருகிறது. பிரம்மாண்டமான இயற்கைக் காட்சிகள், கம்பீரமான அரண்மனைப் பின்னணிகள், ராமர், சீதையின் திருமணக் காட்சிகள் எனப் பல அழகான தருணங்கள் இடம்பெற்றுள்ளது.
இத்திரைப்படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர். ‘மங்கள வண்ணமே’ பாடல் தற்போது வேர்ல்ட் ஆஃப் ராமாயணா மற்றும் டி-சீரிஸ் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல்களில் வெளியாகியுள்ளது. மேலும், அனைத்து இசை ஸ்ட்ரீமிங் தளங்களிலும் இப்பாடலைக் கேட்கலாம். இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளிலும் ஒரே நேரத்தில் இப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
அரண்மனையின் பிரம்மாண்டம், புனிதமான திருமண நிகழ்வுகள், அயோத்திக்கு வெளியே அவர்களது வாழ்க்கைப் பயணம் எனப் பல்வேறு தருணங்களை இப்பாடல் காட்சிப்படுத்துகிறது. வில், அம்பு மற்றும் வாளுடன் ராமர் தோன்றும் காட்சிகள் பாடலின் காட்சி அழகை மேலும் மெருகேற்றுகின்றன. பரந்த இயற்கைக் காட்சிகள், கதையின் பின்னணியாக அமையும் உலகத்தை நம் கண்முன் கொண்டு வருகின்றன. ராமர், சீதைக்கு இடையிலான பாசப்பிணைப்பையும் ‘மங்கள வண்ணமே’ பாடல் அழகாக வெளிப்படுத்துகிறது. அவர்களது திருமணக் காட்சிகள் இணையின் மகிழ்ச்சியையும் திருமணத்தின் புனிதத்தையும் எடுத்துரைக்கின்றன.
அதே நேரத்தில், வனவாசப் பயணத்தின் காட்சிகள் அவர்களது உறவின் மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்துகின்றன. அரண்மனையின் ஆடம்பரத்திலிருந்து விலகி, கடமை, நம்பிக்கை, ஒற்றுமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட புதிய வாழ்க்கையை இருவரும் தொடங்கும் தருணங்கள், அவர்களது உறவை மேலும் நெருக்கமாகப் புரிந்துகொள்ள உதவுகின்றன.
ஏ.ஆர். ரஹ்மானின் இசையமைப்பும், டாக்டர் குமார் விஸ்வாஸின் இந்திப் பாடல் வரிகளும் இந்தப் பாடலுக்கு வலுசேர்க்கின்றன. இந்திப் பதிப்பில் அற்ஜித் சிங் மற்றும் ஷ்ரேயா கோஷல் தங்களது குரல்களால் பாடலுக்கு உயிரூட்டியுள்ளனர். ஒவ்வொரு மொழிப் பதிப்பிலும் அந்தந்த மொழிக்கேற்ற பாடகர்கள் மற்றும் பாடலாசிரியர்கள் இடம்பெற்றுள்ளனர். தமிழ்ப் பதிப்பில் அபய் ஜோத்புர்கர் மற்றும் சைந்தவி பாடியுள்ளனர். தமிழ்ப் பாடல் வரிகளை கார்த்திக் நேதா எழுதியுள்ளார்.
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணா’ படத்திற்கு இசையமைத்தது குறித்தும், ‘மங்கள வண்ணமே’ பாடல் குறித்தும் ஏ.ஆர். ரஹ்மான் பகிர்ந்து கொண்டதாவது, “‘ராமாயணம்’ என்பது பல தலைமுறைகளாக மக்களின் மனதில் இடம்பெற்றிருக்கும் கதை. அத்தகைய கதையை இசையின் வழியாக அணுகியது எனக்கு மிகவும் சிறப்பான அனுபவம். சீதையின் உறவு தூய்மையானது. அந்த உணர்வை இசையில் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். ‘மங்கள வண்ணமே’ பாடலின் மூலம் கேட்பவர்கள் அந்த அன்பையும் பக்தியையும் உணர்வார்கள். அந்த மெல்லிசையில் தங்களுக்கான தனிப்பட்ட உணர்வைக் கண்டடைவார்கள் என்றும் நம்புகிறேன். சில கதைகளை வார்த்தைகளால் விளக்க வேண்டியதில்லை. அவற்றை உணர்ந்தால் மட்டுமே போதும்” என்றார்.
‘மங்கள வண்ணமே’ பாடல் குறித்துப் பாடகர் அபய் ஜோத்புர்கர் கூறியதாவது, “பல தலைமுறைகளாக நமது வாழ்க்கையிலும் கலாசாரத்திலும் கலந்துள்ள ‘ராமாயணா’ கதை திரைப்படமாகும்போது அதில் இடம்பெற்றுள்ள ‘மங்கள வண்ணமே’ பாடலை பாடியிருப்பது மகிழ்ச்சி. குறிப்பாக, ராமர், சீதைக்கு இடையிலான அன்பையும் ஒற்றுமையையும் இந்தப் பாடல் வெளிப்படுத்துகிறது. அவர்களது உறவில் இருக்கும் நேர்மையும் உண்மைத்தன்மையும் அந்தக் காதலைக் காலத்தால் அழியாததாக மாற்றுகின்றன. அந்த உணர்வுகளை எனது பாடலில் வெளிப்படுத்த முயன்றேன்” என்றார்.
பாடலாசிரியர் டாக்டர் குமார் விஸ்வாஸ் பகிர்ந்து கொண்டதாவது, “ஸ்ரீராமரின் தெய்வீகத் திருமணத்தைக் கொண்டாடும் பாடலை எழுதுவதற்காக நான் பலமுறை அமர்ந்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் சில வரிகளை எழுதி, மீண்டும் அவற்றைப் படித்துப் பார்த்தபோது, பரம்பொருளின் திருமணத்தின் பிரம்மாண்டம், நான் என் வார்த்தைகளால் வெளிப்படுத்தக்கூடியதைவிட ஆயிரம் மடங்கு உயர்ந்ததாக இருக்கும் என்று உணர்ந்தேன். இறுதியில், எனது எழுத்தில் என்னால் திருப்தியடைய முடியாத நிலையில், அன்னை சரஸ்வதியை வேண்டிப் பிரார்த்தித்தேன். இந்தப் படைப்பு இன்று எந்த வடிவத்தைப் பெற்றிருந்தாலும், அது அன்னையின் படைப்பே என்று நம்புகிறேன்.
ஸ்ரீராமருக்கும் அன்னை சீதைக்கும் இடையிலான பந்தம் பல பிறவிகளைக் கடந்தது. அதை ஒரு யுகத்திற்குள் மட்டும் அடக்கிவிட முடியாது. ஸ்ரீராமர் சூரிய வம்சத்தில் அவதரித்தார். அன்னை சீதையோ பூமித்தாயின் மடியில் தோன்றினார். சூரியன் அரச அதிகாரத்தையும் இறையாண்மையையும் குறிக்கிறது. அதன் ஒளி பூமியைப் பிரகாசிக்கச் செய்கிறது. மறுபுறம், பூமி விவசாயம் மற்றும் உயிர்களுக்கு உணவளிக்கும் ஆற்றலைக் குறிக்கிறது. சூரியனின் ஒளியைப் பெற்று, அதை உணவாகவும் உயிராகவும் மாற்றுகிறது. எனவே, இவர்களது இணைவு தவிர்க்க முடியாத ஒன்று மட்டுமல்ல; உயிர்களின் தொடர்ச்சிக்கும் வாழ்க்கையின் நிலைத்தன்மைக்கும் அடிப்படையான ஒன்றாகும்” என்றார்.
*‘ராமாயணா’ திரைப்படம் குறித்து*
உலகின் போற்றுதலுக்குரிய இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தைப் பிரம்மாண்டமான திரை அனுபவமாகக் கொண்டுவரும் இப்படத்தில், ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக ராக்கிங் ஸ்டார் யஷ், அனுமனாக சன்னி தியோல், லட்சுமணனாக ரவி துபே ஆகியோர் நடித்துள்ளனர். நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை, நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம், எட்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற டிஎன்இஜி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. யஷ்ஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனமும் இப்படத்தின் தயாரிப்பில் இணைந்துள்ளது.
இரண்டு பாகங்களைக் கொண்ட பிரம்மாண்டத் திரைப்படமாக ‘ராமாயணா’ உருவாகிறது. முதல் பாகம் வரும் நவம்பர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இரண்டாம் பாகம் 2027 தீபாவளியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் இப்படம் வெளியாகவுள்ளது. ஐமேக்ஸ் தொழில்நுட்பத்திலும் இப்படம் திரையிடப்படவுள்ளது. இந்தியாவைத் தவிர உலகளாவிய விநியோக உரிமையை சோனி பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்தி பேசும் சந்தையில் தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை விநியோகிக்கிறது. படத்தின் பாடல்கள் டி-சீரிஸ் இசை நிறுவனத்தின் கீழ் வெளியாகின்றன.
*DNEG பற்றி:*
DNEG என்பது திரைப்படங்கள், தொலைக்காட்சி மற்றும் ஆழமான உள்ளடக்கங்களுக்கான உலகத் தரம் வாய்ந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் அனிமேஷன் நிறுவனமாகும். வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளில் அலுவலகங்கள் மற்றும் ஸ்டுடியோக்களை கொண்டுள்ளது. சுமார் 30 ஆண்டுகால அனுபவம் கொண்ட DNEG, 2011 முதல் ‘சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்’ பிரிவில் 8 அகாடமி விருதுகளை வென்றுள்ளது. மேலும், தனது உயர்தரமான படைப்புகளுக்காக பல BAFTA, பிரைம்டைம் எம்மி மற்றும் விஷூவல் எஃபெக்ட்ஸ் சொசைட்டி விருதுகளையும் பெற்றுள்ளது.
தி ஆடிஸி (ஜூலை 2026), மோட்டார் சிட்டி (ஜூலை 2026), கோயோட் vs அக்மே (ஆகஸ்ட் 2026), ’டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ (ஆகஸ்ட் 2026), கிளாரா அண்ட் த சன் (அக்டோபர் 2026), ஸ்ட்ரீட் ஃபைட்டர் (அக்டோபர் 2026), தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர் – சீசன் 3 (நவம்பர் 2026), தி கேட் இன் தி ஹேட் (நவம்பர் 2026), ராமாயணம்: பாகம் 1 (நவம்பர் 2026), தி ஆங்கிரி பேர்ட்ஸ் மூவி 3 (டிசம்பர் 2026), அபோவ் தி பிலோ (டிசம்பர் 2026), அனிமல் பிரண்ட்ஸ் (ஜனவரி 2027), பேட் ஃபேரிஸ் (மே 2027), பிளேட் ரன்னர் 2099, அலோன் அட் டான், எஸ்ஏஎஸ்: ரோக் ஹீரோஸ் சீசன் 3, ஆன் தி லைன், ரோட் ஹவுஸ் 2, ஸ்னூபி அன்லீஷ்ட், பிளட் ஆன் ஸ்னோ, திஸ் சிட்டி இஸ் அவர்ஸ் சீசன் 2, பிளாக் பேலஸ், குண்டம் மற்றும் தி ஆடிஸி ஆகிய திரைப்படங்கள் தயாரிப்பில் உள்ளது.
*பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் பற்றி:*
திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான நமித் மல்ஹோத்ராவால் நிறுவப்பட்ட பிரைம் போகஸ் ஸ்டுடியோஸ், உலகளாவிய பார்வையாளர்களுக்காகத் திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் கேமிங் ஆகிய துறைகளில் புதுமையான மற்றும் ஈர்க்கக்கூடிய படைப்புகளுக்கு நிதியளித்து அவற்றை உருவாக்குகிறது. சோனி பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக அல்கான் என்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து பிரைம் போகஸ் ஸ்டுடியோஸ் சமீபத்தில் தயாரித்த ‘தி கார்பீல்ட் மூவி’ என்ற அனிமேஷன் திரைப்படம், உலகம் முழுவதும் 257 மில்லியன் டாலருக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளது.
தற்போது பிரைம் போகஸ் ஸ்டுடியோஸ் பல சுவாரஸ்யமான திட்டங்களை உருவாக்கி வருகிறது. இதில் லெஜெண்ட்ரி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ரியான் ரெனால்ட்ஸின் தயாரிப்பு நிறுவனமான மேக்ஸிமம் எஃபோர்ட் ஆகியவற்றுடன் இணைந்து லைவ்-ஆக்ஷன் மற்றும் அனிமேஷன் கலந்த திரைப்படமான அனிமல் பிரண்ட்ஸ் மற்றும் பாரமவுண்ட் பிக்சர்ஸுக்காக ரோவியோ என்டர்டெயின்மென்ட் லிமிடெட், சேகா, ஃப்ளைவீல் மீடியா, ஒன் கூல் க்ரூப் மற்றும் டெண்ட்சு ஆகியவற்றுடன் இணைந்து அனிமேஷன் திரைப்படமான ‘தி ஆங்கிரி பேர்ட் மூவி 3’ ஆகியவை அடங்கும். மேலும், 5,000 ஆண்டுகள் பழமையான காவியத்தை அடிப்படையாகக் கொண்ட ‘ராமாயணம்’ கதையின் இரண்டு பாகங்களையும் இந்நிறுவனம் தயாரிக்கிறது. ராமயண கதையை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத திரைப்பட அனுபவமாக வழங்குவதோடு, விரிவான ‘டிரான்ஸ்மீடியா’ உலகத்தையும் உருவாக்கவுள்ளது.
*மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் பற்றி:*
நடிகர் யாஷ் நிறுவிய மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் புதிய திறமையாளர்கள் மற்றும் கதைகளை ஊக்குவித்து சினிமாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் செயல்படும் தயாரிப்பு நிறுவனம். மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனம் தற்போது இரண்டு பிரம்மாண்டமான திரைப்படங்களை இணைந்து தயாரித்து வருகிறது. ஒன்று கேவிஎன் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து ’டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ திரைப்படம், மற்றொன்று பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து ’ராமாயணம்‘ திரைப்படம்.
*டி- சீரிஸ் மியூசிக் பற்றி:*
இந்தியாவின் முன்னணி இசை நிறுவனமாகவும், உலகளவில் முக்கியமான பொழுதுபோக்கு நிறுவனமாகவும் டி- சீரிஸ் திகழ்கிறது. யூடியூப் தளத்தில் அதிகளவில் பார்வையாளர்களை கொண்டுள்ள டி-சீரிஸ் உலகின் முன்னணி சேனல்களில் ஒன்றாகத் திகழ்கிறது. பல பில்லியன் பார்வைகளையும், இந்தி திரைப்படப் பாடல்கள், பக்திப் பாடல்கள், சுயாதீன இசை மற்றும் பிராந்திய இசைப் படைப்புகள் என விரிவான இசைத் தொகுப்பையும் கொண்டுள்ளது. இசை மற்றும் திரைப்படத் துறையில் பல முன்னணி திறமைகளை அறிமுகப்படுத்தியுள்ள டி-சீரிஸ், இந்திய இசை உலகில் தொடர்ந்து புதிய டிரெண்ட் உருவாக்கி, புதுமையான இசை அனுபவத்தையும் கொடுத்து வருகிறது. காலத்தால் அழியாத மெட்டுகளையும், புதிய திறமைகளின் படைப்புகளையும் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து, உலகெங்கும் உள்ள இசை ரசிகர்களுடன் இணையும் இசைப் பயணத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

