என்ன விலை- விமர்சனம்

“உலகில் எல்லாவற்றிக்கும் ஒரு விலை இருக்கு” என்பார்கள். ஆனால் என்ன விலை கொடுத்தாலும் வாங்கவோ, பெறவோ முடியாத பொக்கிசங்களும் உலகில் உண்டு. என்ன விலை படத்தின் கதையில் அப்படியான ஒரு தொனி அறத்தின் குரலாக ஒலிக்கிறது

இராமேஸ்வரம் பகுதியில் தன் குடும்ப உறுப்பினர்களோடு வாழும் எளிய மனிதர் கருணாஸ். கடற்கரையில் இறந்தவர்களுக்கு திதி கொடுத்து சில்லறையை வீசிச்செல்வது ஒரு வழக்கம்..அப்படி திதி கொடுப்பவர்கள் வீசிச்செல்லும் சில்லறைகளை எடுத்தும் ஜீவனம் நடத்துகிறார் கருணாஸ். இப்படியான வறுமையேந்தி வாழும் அவருக்கு ஒருமுறை தங்க ஆபரணம் பெரியளவில் கிடைக்கிறது. நல்லபிள்ளையாக அதை அவர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கச் செல்கிறார். ஆனால் அங்கு வேறோர் நாடகம் அரங்கேற்றப்படுகிறது..அதன்பின் நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் மீதி (நீதி) திரைக்கதை

கதையின் நாயகனாக முத்திரைப் பதித்துள்ளார் கருணாஸ். அவரின் இயலாமை நிறைந்த முகபாவனை நம் மனதை பிசைகிறது. தமிழ்சினிமாவில் 25 ஆண்டுகளை கடக்கும் கருணாஸுக்கு என்னவிலை ஒரு நல்லநிலையை கொடுக்கும். வழக்கறிஞராக வரும் நிமிஜா சஜயன் படத்தின் பெரிய தூண். அருமையாக நடித்துள்ளார். இதர கேரக்டர்களில் வரும்,
விஜயலட்சுமி வீரமணி, கமலேஷ் ஜெகன், ஒய்.ஜி. மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், மோகன் ராமன், கவிதாலயா கிருஷ்ணன், தீபா சங்கர், லொள்ளு சபா சுவாமிநாதன், ஷாஷா சிவகுமார், சேத்தன் சீனு எல்லோரும் கொடுத்த வேலைக்கு குறை வைக்கவில்லை

அதிரடி படங்களில் மாஸ் காட்டும் இசைஞர் சாம்.சி.எஸ் இந்தப்படத்தின் பின்னணி இசையில் வேறோர் பரிணாமத்தை அடைந்துள்ளார். நம் மென்னுணர்வுகளை அவரின் இசை தட்டியெழுப்பி தாலாட்டுகிறது. ஆல்.பி ஆண்டனியின் ஒளிப்பதிவு படத்தின் தரத்தை மேலும் ஒருபடி உயர்த்துகிறது

சஜீவ் பழூர் இப்படத்தை மிக நேர்த்தியாக இயக்கியுள்ளார். “ஒரு படம் வெறும் பொழுது அம்சத்தோடு நின்று விடக்கூடாது, அதே சமயம் ரசிகர்களுக்கு பொழுதுபோக்கும் கொடுக்க வேண்டும்” என்ற எல்லையைச் சரியாக தொட்டிருக்கிறார். இந்தப்படம் எண்டர்டெய்ன்மெண்ட் மட்டும் செய்யவில்லை..நமக்கு எஜிகேட்டும் செய்கிறது

என்னவிலை- நல்லவினை

3.75/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *