லைகா தயாரிப்பில் சிக்மா படத்தை ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ளார். சந்தீப் கிஷன் நடித்துள்ள இப்படத்தின் புரொமோஷன் வேலைகளில் மொத்த படக்குழுவும் பிஸி. நேற்று நடந்த சிக்மா படவிழாவில்
இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேசுகையில்,
“‘சிக்மா’ படத்தின் பிரமோஷன் பணிகளை சேலத்தில் இருந்து ஆரம்பிப்பது மகிழ்ச்சி. ஏனென்றால், ‘சிக்மா’ படத்திற்காக கிட்டத்தட்ட 10 நாட்கள் இங்கு படப்பிடிப்பு நடத்தினோம். அதனால், இங்கு நிறைய அழகான நினைவுகள் உண்டு. சுபாஸ்கரன் சார், தமிழ்குமரன் சார், சந்தீப், ஃபரியா மற்றும் எனது படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. என் குடும்பத்தினருக்கும் நன்றி. நான் இயக்கிய முதல் படம் ‘சிக்மா’ அக்டோபர் 2 அன்று வெளியாகிறது. நம் எல்லோர் வாழ்விலும் ஒரு சிக்மா மொமண்ட் கண்டிப்பாக இருக்கும். அதாவது, கடினமான தருணங்களில் இருந்து மீண்டு வர நாம் எடுக்கும் ஒரு முடிவு நம் வாழ்க்கையை மாற்றும். அதுதான் ‘சிக்மா’ திரைப்படம். திரையரங்குகளுக்கு சென்று படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவு கொடுங்கள்” என்றார்.

