Wild tamilnadu- ஆவணப்படம் விமர்சனம்

“நீரின்றி அமையாது உலகு என்றால் காடின்றி பொழியாது நீர்” எனலாம். நம் நாட்டின் வளமும் வாழ்வும் காட்டின் வளத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. நமது காட்டின் அளவும் அழகும் என்னென்ன என்பதையும், அங்கு வாழும் மிருகங்கள் பறவைகளின் வாழ்வையும் அச்சு அசலாக காட்டி ஒரு சிறந்த ஆவணமாக பதிவு செய்துள்ளனர்

ஒரு புலி தன் இணைய பின் தொடர்கிற காட்சியாக இருக்கட்டும், ஒரு புழு நெளிகின்ற காட்சியாக இருக்கட்டும் அவ்வளவு நேர்த்தியாக படம்பிடித்துள்ளனர். கேமராமேனின் அசாத்திய உழைப்பும் அழகான பிரேமிங்கும் பிரம்மிக்க வைக்கிறது. கல்யாண் வர்மா படத்தின் இயக்கத்தில் மிகவும் மெனக்கெட்டுள்ளார். சுந்தரம் பாஸ்டெனெர்ஸ் சிறப்பாக பொறுப்புணர்ந்து தயாரித்துள்ளனர்

காட்சிகளுக்கேற்ப நல்லிசையைக் கொடுத்து நம்மை படத்திற்குள் அழைத்துச் செல்கிறார் இசைஞர் ரிக்கிகெஜ்!

சில பதிவுகள் காலத்தால் அழிக்க முடியாததாக இருக்கும். இந்த Wild tamilnadu ஆவணப்படமும் அந்த வரிசையில் வைக்க வேண்டிய ஒன்று!

-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *